இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இந்தி திணிப்பு!
25 Apr 2026, 6:41 pm

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (India Meteorological Department) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தி முதன்மை மொழியாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை முதன்மை மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இணையதளம் முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பயனர்கள் இணையதளத்தைத் திறக்கும் போது முதலில் இந்தி மொழியிலேயே தகவல்கள் காணப்படுகின்றன.

ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்பும் பயனர்கள், இணையதளத்திற்குள் சென்ற பிறகே மொழியை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதற்கு முன்பே ஒரு முறை இதுபோன்று இந்தியில் மாற்றம் செய்யப்பட்டு பின் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது