தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இமாச்சலப் பிரதேச நீர்மின் திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் தீரமிக்க வர்க்கப் போராட்டம்

1 Jun 2026, 10:02 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இமாச்சலப் பிரதேச நீர்மின் திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் தீரமிக்க வர்க்கப் போராட்டம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இமாச்சலப் பிரதேச நீர்மின் திட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் தீரமிக்க வர்க்கப் போராட்டம்

எஸ்ஜேவிஎன்எல் நிர்வாகத்திற்கு எதிராக கொந்தளிப்பு

வேலைநிறுத்தம் 45

சிம்லா, ஜுன் 1- உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் தொழி லாளர் வர்க்க எழுச்சியைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீர்மின் திட்டங்களி லும் தொழிலாளர்களின் போர் குணமிக்க நீண்டகாலப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட் (SJVNL) பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கும் 1500 மெகாவாட் நாத்பா ஜாக்ரி (NJHPS) மற்றும் 412 மெகா வாட் ராம்பூர் நீர்மின் நிலையங் களின் ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஊதியப் பாகுபாடு மற்றும் தொழி லாளர் உரிமை மீறல்களுக்கு எதி ராக மாபெரும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சிஐடியு இணைவு பெற்ற எஸ்ஜேவிஎன்எல் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் பதாகையின் கீழ் திரண்ட நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள், திட்ட வளாகங்களை முற்றுகையிட்டு தங்களின் உரிமைக் குரலை எழுப்பியுள்ளனர்.

தொடர் போராட்ட வரலாறும் நிர்வாகத்தின் துரோகமும்

இமாச்சலப் பிரதேச நீர்மின் திட்டங்களில் ஒப்பந்த உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான இந்த வர்க்கப் போராட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்தே திட்டமிட்ட முறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீருடைப் படி, சலவைப் படி, போக்குவரத்துப் படி மற்றும் வீட்டு வாடகைப்படி சார்ந்த சில சலுகைகளை 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதப் போராட்டங் கள் மூலமாகத் தொழிலாளர்கள் வென்றெடுத்த போதிலும், கிராஜு விட்டி, குழு காப்பீடு மற்றும் தகுதி வாய்ந்த ஊதிய அமைப்பு போன்ற முதன்மையான கோரிக்கைகளை நிர்வாகம் தொடர்ந்து கிடப்பில் போட்டு வஞ்சித்தது.

இதன் காரணமாக 2023 இல் 53 நாட்களும், 2025 இல் 47 நாட்களும் மதிய உணவு இடை வேளை தர்ணா போராட்டங்களை நடத்திய தொழிலாளர்கள், பின்னர் நிர்வாகத்தின் பிடிவாதப் போக்கைக் கண்டித்து 77 நாட்கள் தளர்வற்ற தொடர் போராட்டத்தை நடத்தினர். ஜாக்ரி, நாத்பா, பாயல், தத்நகர் ஆகிய பகுதிகளில் வெடித்த இந்தத் தொடர் வர்க்கப் போராட்டங்களின் விளைவாக, பல முறை முத்தரப்புப் பேச்சுவார்த்தை கள் நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், அவற்றை நடைமுறைப்படுத்தாமல் நிர்வாகம் தொடர்ந்து காலம்கடத்தி வருவதே தற்போதைய தொழி லாளர் கொந்தளிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.

திறனுக்கேற்ற ஊதிய மறுப்பும் உழைப்புச் சுரண்டலும்

ஆலையின் உள்ளே நிலவும் கடுமையான ஊதியப் பாகுபாடுகள் மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்கள் குறித்துப் போராட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் தங்களின் குமுறல்களைப் பகிர்ந்துகொண்ட னர்.

“நாங்கள் பல ஆண்டுகளாக உயர் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அசாத்தியத் திறன் கொண்ட பணி களை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், நிர்வாகமும் ஒப்பந்த தாரர்களும் எங்களை இன்னமும் திறனற்ற தொழிலாளர்கள் (Un skilled) என்ற பிரிவின் கீழ் வைத்தே மிகக் குறைந்த ஊதியத்தை வழங்கி வஞ்சிக்கிறார்கள். உழைப்புக்கு ஏற்ற முறையான பதவியோ (Work-based designation), அதற்கான ஊதிய அமைப்போ எங்களுக்கு வழங்கப்படுவதில்லை” என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

தொழில்துறை தகராறுகள் சட்டம் 1947 இன் கீழ் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகளின் போது, திட்ட இயக்குநர் மற்றும் துறைத் தலைவர்கள் முன்னி லையில், ஒப்பந்தத் தொழிலா ளர்களுக்கான கிராஜுவிட்டி, தகுதிவாய்ந்த ஊதிய நிர்ண யம் மற்றும் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய ₹755 பிரீமியம் கொண்ட குழு காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்து வதாக நிர்வாகம் கொள்கை அள வில் ஒப்புக்கொண்டது. இதன் காரணமாக 2025 செப்டம்பரில் அறி விக்கப்பட்ட பொது வேலைநிறுத்த த்தைத் தொழிலாளர்கள் தற்காலி கமாக ஒத்திவைத்தனர். ஆனால், இந்த எழுத்துப்பூர்வமான உறுதி மொழிகள் எதுவும் இதுவரை அடிமட்டத்தில் செயல்படுத்தப்பட வில்லை.

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னோடி வர்க்க விழிப்புணர்வு

இப்போராட்டக் கூட்டத்தில் திரண்டிருந்த தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய சிஐடியு மாநிலச் செயலாளர் பிரேம் கௌதம், நாடெங்கிலும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் அவுட்சோர்சிங் முறையினாலும், குறைந்த ஊதியத்தினாலும் எதிர்கொள்ளும் வாழ்வாதார நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவிலேயே இமாச்சலப் பிரதேசம் தான் நீர்மின் திட்டங் களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை வர்க்க ரீதியாகத் திட்டமிட்டுத் திரட்டி, சிஐடியு பதாகையின் கீழ் இத்தகைய மாபெரும் கூட்டுப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கடினமான, குளிரான மற்றும் உயிருக்கு ஆபத்தான மலைப் பகுதிகளில் உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் கண்ணி யத்தையும், சமூகப் பாதுகாப்பையும் நிலைநாட்ட இந்தத் தளர்வற்ற போராட்டம் தொடரும்” என்று அவர் எச்சரித்தார்.

பொதுத்துறை நீர்மின் திட்டங் களில் ஒப்பந்தத் தொழிலாளர் களின் பங்களிப்பை அங்கீகரிக்க வும், சட்டப்பூர்வ சமூகப் பாது காப்பை வென்றெடுக்கவும் இப்போராட்டம் புதிய வர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்த உடன்பாடுகள் உடனடி யாக முழுமையாக நிறைவேற்றப் படாவிட்டால், எஸ்ஜேவிஎன்எல் நிறுவனத்தின் அனைத்துத் திட்டங் களிலும் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தொழிற் சங்கங்கள் எச்சரித்துள்ளன. தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.