தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இமாச்சலப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் பல இடங்களைக் கைப்பற்றிய இடதுசாரிகள்

31 May 2026, 8:09 pm
இமாச்சலப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் பல இடங்களைக் கைப்பற்றிய இடதுசாரிகள்

இமாச்சலப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் பல இடங்களைக் கைப்பற்றிய இடதுசாரிகள்

இமாச்சலப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலின் ஆரம்பக்கட்ட முடிவு களில் காங்கிரஸ், பாஜகவிற்கு அடுத்தப்படியாக மாநிலத்தின் மூன்றாவது பெரிய அரசியல் சக்தி யாக இடதுசாரிகள் உருவெடுத் துள்ளனர்.

இமாச்சலப் பிரதேசம் முழு வதும் 4 நகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி களுக்கான தேர்தல் 3 கட்டமாக நடைபெற்றது. நகராட்சி தேர்தல் கள் மே 17 அன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி களுக்கான தேர்தல் மே 26 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. மே 31 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்த வாக்கு எண்ணிக்கை யின் ஆரம்பக்கட்ட முடிவில் மாநி லம் முழுவதும் இடதுசாரிகளின் ஆதரவு பெற்ற பல வேட்பாளர் கள் வெற்றி பெற்றுள்ளனர். இடது சாரிகள் சார்பில் போட்டியிட்ட அபய் தாம்தா அசாரலி கிராம பஞ்சாயத்து தலைராக தேர்ந்தெ டுக்கப்பட்டார்.

அதே போல மைன் வர்லா கிராம பஞ்சாயத்து தலைவ ராக சஞ்சய் ஜம்மாவாலும், கோலு ஜுப்பார் (தாராபூர்) கிராம பஞ்சா யத்தின் தலைவர் பதவியை ஹிமி தேவி கைப்பற்றினார்.

இதில் ஹிமி தேவி ஆஷா, அங்கன்வாடி மற் றும் சத்துணவு ஊழியர்களின் வலுவான போராட்டங்களில் ஈடு பட்டவர். மேலும் சமீபத்தில் சிம்லா வில் உள்ள கே.என்.ஹெச் மருத்து வமனையை மாற்றுவதற்கு எதி ராக நடந்த போராட்டங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.

குறிப்பாக இளம் தலைவரான விஜய் சந்த், ஜடவுன் கிராம பஞ்சா யத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் சுபாஷ் தாக்கூர், கார்கா பஞ்சாயத்தின் துணைத் தலைவர் பதவியை வென்றுள் ளார். சுபாஷ் தாக்கூர் இமாச்சல் பிராந்திய பால்பண்ணை சங்கத் தலைவராக பணியாற்றி வரு கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.