தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இமாச்சலப் பிரதேச அங்கன்வாடி ஊழியர்களின் பிரம்மாண்ட எழுச்சி

12 Jun 2026, 8:52 pm
வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இமாச்சலப் பிரதேச அங்கன்வாடி ஊழியர்களின் பிரம்மாண்ட எழுச்சி

வட இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி இமாச்சலப் பிரதேச அங்கன்வாடி ஊழியர்களின் பிரம்மாண்ட எழுச்சி

பாஜக அரசு பணிந்தது; முதற்கட்ட வெற்றி

வேலைநிறுத்தம் 58

சிம்லா (இமாச்சலப் பிரதேசம்), ஜூன் 12- பஞ்சாப் மற்றும் தில்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தின் தொழிலாளர் வர்க்கப் போராட்ட அலைகளைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவில் உழைக்கும் பெண் வர்க்கத்தின் போர்க்குணமிக்க வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வர்க்கப் போராட்டம் வெடித்துள்ளது.

சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட ‘அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின்’ தலைமையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட 4,000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் தொழிலாளர்கள் ஜூன் 8 அன்று சிம்லாவை முற்றுகையிட்டு நடத்திய பிரம்மாண்ட பேரணி மற்றும் தர்ணா போராட்டம், அம்மாநிலத்தின் கார்ப்ப ரேட் நவதாராளவாத கொள்கைகளை அதிரவைத்துள்ளது.

தங்களின் தகுதியான ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் சட்டப்படியான சமூகப் பாதுகாப்பு உரிமைகளை மீட்டெடுக்க இந்த உழைப்புப் படை வீதியில் இறங்கியது.

எல்லையற்ற பணிகளும் அற்ப மதிப்பூதிய ஏமாற்றும்

இப்போராட்டப் பேரணியில் சிஐடியு தேசியச் செயலாளர் டாக்டர் காஷ்மீர் சிங் தாகூர், அங்கன்வாடி ஊழியர் சங்க தேசியப் பொதுச் செயலாளர் உஷா ராணி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். அப்போது, தங்களின் உரிமைகளும் பாதுகாப்புகளும் திட்டமிட்டு மறுக்கப்பட்டு வருவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.அங்கன்வாடி ஊழியர்கள் தற்போது வெறும் முன்பள்ளி கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுடன் மட்டும் நிறுத்தப்படுவதில்லை. மாறாக:

• போஷன் டிராக்கர் (Poshan Tracker) மொபைல் செயலி மூலம் தினசரி டிஜிட்டல் தரவுகளைப் பதிவேற்றுதல்.

• பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் மற்றும் அரசு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுத்தல்.

• உள்ளூர் மக்கள் தொகை கணக்கெடுப்புகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல்வேறு அரசாங்கத்தின் கூடுதல் பணிகளைச் சுமத்தல்.

கிராமப்புறங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) திட்டத்தின் முதுகெலும்பாக விளங்கும் இத்தொழிலாளர்களை, அரசு இன்னும் ‘கௌரவப் பணி யாளர்கள்’ என்றே அழைத்து ஏமாற்றி வருகிறது. இதன் மூலம் அவர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டரீதியான சலுகைகளை வழங்காமல் அரசு நிர்வாகம் அப்பட்டமாகத் தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து உழைப்புச் சுரண்டலை நீடிக்கிறது.

டிஜிட்டல் திணிப்புச் சுமையும் நிறுவன ரீதியான அலட்சியமும்

நெடுந்தொலைவுப் பயணங்கள் மற்றும் கடினமான புவியியல் சூழலில் களப்பணியாற்றும் இவர்களுக்கு, எவ்வித விபத்துக் காப்பீடோ, ஆபத்துக்காலப் படியோ அல்லது பணி மூப்புப் பலன்களோ வழங்கப்படுவதில்லை. இவற்றுடன், மொபைல் செயலிகளில் அறிக்கைகளையும் புகைப்படங்களையும் பதிவேற்ற, தொழிலாளர்கள் தங்களின் சொந்தப் பணம், சொந்த இணையம் மற்றும் மின்சாரத்தையே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அங்கன்வாடி மையங்களுக்குத் தேவையான எரிபொருள், காய்கறிகள் மற்றும் விநியோகப் பொருட்களின் போக்குவரத்துக் கட்டணங்களையும் தங்களின் சொந்தப் பணத்திலிருந்தே செலவழிக்கும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளனர். இத்த கைய நிறுவன ரீதியான அலட்சியப் போக்கிற்கு எதிராகவே இம்முறை பெண்கள் வீரியத்துடன் அணிதிரண்டனர்.

அமைச்சரின் அதிகாரப்பூர்வ உத்தரவாதங்களும் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளும்

இப்பிரம்மாண்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, சங்கப் பிரதிநிதிகள் குழு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தணி ராம் ஷாண்டிலை (Dhani Ram Shandil) நேரில் சந்தித்துத் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவைச் சமர்ப்பித்தனர். இச்சந்திப்பின் விளை வாக, தொழிலாளர் எழுச்சிக்கு இணங்கி அரசு சில முக்கிய உத்தரவாதங்களை எழுத்துப்பூர்வமாக வழங்கியது:

1. பணிக்கொடை : நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படை யில் அங்கன்வாடி ஊழியர்களுக்கான பணிக்கொடை பலன்களை வழங்க அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

2.மொபைல் படி உயர்வு: ஆண்டு மொபைல் ரீசார்ஜ் படி ₹2,000-லிருந்து அதிரடியாக ₹4,000 ஆக உயர்த்தப்படும். புதிய ஸ்மார்ட்போன்கள் வழங்குவது குறித்து ஆராய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்படும்.

3.செலவினத் திருப்பிச் செலுத்துதல்: மையங்களை நடத்த ஊழியர்கள் தங்களின் சொந்தப் பணத்திலிருந்து செலவழித்த எரிபொருள் மற்றும் காய்கறிக்கான தொகை கள் இனி ஒவ்வொரு மாதமும் முறையாகத் திருப்பிச் செலுத்தப்படும்.

4.சமூகப் பாதுகாப்பு: வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் விபத்து மரணங்களுக்கான இழப்பீடுகளை ‘தொழி லாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923’-ன் கீழ் வழங்குவது குறித்து அரசு விரிவாக ஆராயும். மேலும், ஹரியானா மாநிலத்தில் வழங்கப்படுவதைப் போன்ற உயர் ஊதியக் கட்டமைப்பை இமாச்சலப் பிரதேசத்திலும் அமல்படுத்து வது குறித்து பரிசீலிக்கப்படும்.

அரசின் இந்த உத்தரவாதங்களை வரவேற்றாலும், வெறும் வாக்குறுதிகளைக் கண்டு ஏமாறப்போவதில்லை என்றும், கோரிக்கைகள் முழுமையாகச் செயல்படுத்தப்படா விட்டால் ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடை பெறவுள்ள அடுத்தகட்ட மறுஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் சிஐடியு சங்கம் எச்சரித்துள்ளது. இது வெறும் மதிப்பூதியத்திற்கான போராட்டம் அல்ல; உழைக்கும் பெண் வர்க்கத்தின் சுயமரியாதை மற்றும் அங்கீகாரத்திற்கான வர்க்கப் போராட்டம் என்பதை சிம்லா எழுச்சி நிரூபித்துள்ளது.

- தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.