தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் மலைவாழ் மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

2 Jan 2026, 3:33 pm
பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் மலைவாழ் மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்
<p><strong>பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் மலைவாழ் மக்கள் உள்ளிருப்புப் போராட்டம்</strong></p> <p>கோவை, ஜன.2- பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு, அதிகாரிகள் வராத நிலை யில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மலை வாழ் மக்கள் உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. இதனையடுத்து, அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தியதை யடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். 2006 வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண் டும். அனைத்து பழங்குடி மக்க ளுக்கும் வீட்டுமனை வழங்க வேண் டும் மற்றும் அடிப்படை வசதி களை மேம்படுத்த வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் தொடர் &nbsp;போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்ஒருபகுதியாக, கடந்த டிச.18 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மலைவாழ் மக்கள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது பேச்சுவார்த்தை நடத் திய வருவாய்த்துறை அதிகாரிகள், 10 நாட்களுக்குள் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்த னர். இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மக்கள், அதிகாரிகளின் அழைப்பின் பேரில் மேல்நிலை பேச்சுவார்த்தைக்காக வெள்ளி யன்று கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்திற்கு வந்தி ருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி பேச்சு வார்த்தைக்கு மாவட்ட ஆட்சியரோ அல்லது அவரது நேர்முக உதவி யாளரோ வராததால் அதிருப்தி யடைந்த மலைவாழ் மக்கள், மாநக ராட்சி கூட்டரங்கிற்குள்ளேயே திடீர் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். தகவல் அறிந்து வந்த மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், இது குறித்து ஆட்சியரிடம் பரிந்துரைப்பதாக தெரிவித்தார். ஆனால், துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தீர்வு காணும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என மக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட வரு வாய் அலுவலர் நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து மலைவாழ் மக்கள் சங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். &ldquo;ஆட்சி யர் தவிர்க்க முடியாத பணி கார ணமாக வரவில்லை, மற்றொரு நாளில் விரிவான கூட்டம் நடத்தப் படும்&rdquo; என அவர் தெரிவித்தார். இருப்பினும், கடந்த முறையும் உறுதி அளித்துவிட்டு தற்போது அதிகாரிகள் வராததை சுட்டிக் காட்டிய மக்கள், எழுத்துப்பூர்வ மான உறுதியை வலியுறுத்தினர். இறுதியில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர், மாவட்ட வன அலுவலர், வரு வாய் அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், மின்வாரிய மற்றும் சுகா தாரத்துறை அதிகாரிகள் என &nbsp;அனைத்துத் துறை அதிகாரிக ளும் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டம் வேறொரு தேதி யில் நடத்தப்படும் என்று வருவாய் அலுவலர் உறுதியளித்தார். இன் றைய நிகழ்வுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக் கையை (Minutes of Meeting) அதி காரிகள் வழங்க ஒப்புக்கொண்ட தையடுத்து, மலைவாழ் மக்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். &nbsp;இப்போராட்டத்தில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் பா.கருப்பசாமி, மாவட் டப் பொருளாளர் கே. மணி, நிர்வாகி கள் பெரியசாமி, வாணிதாசன், வி.எஸ்.பரமசிவம், ஆர்.தங்க வேலு, கே.பத்மினி, கே. ரங்கசாமி மற்றும் சிபிஎம் மேட்டுப்பாளையம் தாலுகா செயலாளர் கே.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.