பழங்குடியின மக்களின் 6 குடிசைகள் தீக்கிரை உரிய நிவாரணம் வழங்க மலைவாழ் சங்கம் கோரிக்கை
3 Feb 2026, 4:00 pm
<p><strong>பழங்குடியின மக்களின் 6 குடிசைகள் தீக்கிரை உரிய நிவாரணம் வழங்க மலைவாழ் சங்கம் கோரிக்கை</strong></p>
<p>திருவள்ளூர், பிப்.3- கடம்பத்தூர் குன்றமேட்டில் பழங்குடி இன மக்களின் குடிசைகள் எரிந்ததில் அரசு ஆவணங்கள், குழந்தைகளின் புத்தகங்களும் எரிந்துள்ளது. இதனால் ஆதரவின்றி தவிக்கும் அம்மக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், திருமேனிகுப்பம் ஊராட்சியில், குன்றமேட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 23 குடும்பத்தினர், வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாயன்று (பிப் 3), எதிர்பாராதவிதமாக குடிசைக்குள் மின்சார கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஸ்-செல்வி,சரவணன்-கீர்தனா, பிரசாந்த்-மஞ்சுளா,சூரியா-சத்தியா, சந்திரன்- முத்தம்மாள்,வேலு-தேவி ஆகியோரின் குடிசைகள் தீக்கிரையானது. இந்த ஆறு வீட்டிலும் இருந்த குடிமனை பட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார், இனச் சான்றிதழ்கள் போன்ற அரசு ஆவணங்கள், குழந்தைகளின் புத்த கங்கள், துணிமணிகள் மற்றும் பண்ட பாத்திரங்கள் எல்லாம்,எரிந்து சாம்பலாகி யுள்ளது. ஒரு சில பெண்கள் மகளிர் குழு விலிருந்து வாங்கி வந்த பணம் எல்லாம் எரித்துள்ளது. இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரடியாக சென்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார்.</p>
