தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாலையை சீரமைக்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கம் மறியல்

11 Dec 2025, 5:47 pm
சாலையை சீரமைக்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கம் மறியல்
<p><strong>சாலையை சீரமைக்கக்கோரி மலைவாழ் மக்கள் சங்கம் மறியல்</strong></p> <p>தருமபுரி, டிச.11- அடிக்கடி விபத்துகளை ஏற்ப டுத்தும் கோட்டப்பட்டி முதல் சிட் லிங் வரை குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீர மைக்க வேண்டும் என வலியுறுத்தி &nbsp;வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் மற்றும் அப் பகுதி கிராம மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி, சிட்லிங் என்பது &nbsp;தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றி யத்திலுள்ள ஒரு மலை கிராமப் &nbsp;பகுதியாகும். சிட்லிங் ஊராட்சியை &nbsp;சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பள் ளத்தாக்கு பகுதியில் அமைந்துள் ளது. இப்பகுதிகளில் மலைவாழ் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். கோட்டப்பட்டி, சிட்லிங், வேல னூர், எஸ்.தாதம்பட்டி, சூரநத்தம், &nbsp;குழுமிநத்தம் போன்ற கிராமங்கள் &nbsp;உள்ளன. சிட்லிங் கிராமத்திலி ருந்து வட்ட தலைநகர் அரூருக்கு வருவதற்கு 45 கிலோ மீட்டர் பய ணிக்க வேண்டியுள்ளது. இதில் சிட்லிங் கிராமத்தில் இருந்து கோட் டப்பட்டி வரை சுமார் 15 கிலோ மீட் டர் சாலை வனப்பகுதியில் அமைந் துள்ளது. இந்த தார்ச்சாலை பல &nbsp;ஆண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்டது. கடந்த 10 ஆண்டு காலமா கவே குண்டும், குழியுமாக காட்சி யளிப்பதால், மழைக்காலங்களில் சாலையில் குளம் போல் தண்ணீர் &nbsp;தேங்கி நிற்கிறது. 15 கிலோ மீட்டர் &nbsp;சாலையை கடக்க அரசு பேருந் தும், இருசக்கர வாகனங்கள் &nbsp;வெகுநேரம் எடுத்துக்கொள்கின் றன. இச்சாலையால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு, உயிர்பலி நிகழ்ந்துள்ளன. பலமுறை மலை கிராம மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த மலைவாழ் மக்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைமையில் வியாழனன்று சிட் லிங் சாலையில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் &nbsp;மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், மாவட்டத் தலைவர் அண்ணாமலை, வட்டத் தலைவர் ஏழுமலை, நிர்வாகிகள் சேரன், சின்னராஜ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த ஊரக &nbsp;வளர்ச்சித்துறை அலுவலர்கள், &nbsp;காவல் துறையினர் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அதில் விரைவில் சாலையை சீரமைப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.