தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறிய முடியாமல் அவதிப்படும் மலைவாழ் மக்கள்

20 Dec 2025, 3:38 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை அறிய முடியாமல் அவதிப்படும் மலைவாழ் மக்கள்
<p>உடுமலை,டிச.20 - எஸ்.ஐ.ஆர் மூலம் புதிய வரைவு வாக்கா ளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று மக்கள் பார்த்து வரும் நிலையில், வாக் காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப் பதை அறிய முடியாமல் மலைவாழ் மக்கள் &nbsp;கடும் அவதிப்படுகின்றனர். &nbsp;திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 18 மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் &nbsp;மக்கள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களின் &nbsp;பெயர் உள்ளதா? என அறிய முடியாமல் உள்ள னர். வாக்காளர் பட்டியலில் பெயர் பார்க்க &nbsp;கண்டிப்பாக முழுமையாக இன்டர்நெட் வசதி &nbsp;தேவை. ஆனால் மலைப்பகுதியில் செல் &nbsp;போன் சிக்னல் கிடைப்பதே அரிது என்பதால், &nbsp;தேர்தல் ஆணையம் தெரிவித்தபடி வாக்கா ளர் பட்டியலை மலைவாழ் மக்கள் பார்க்க முடியாத சூழல் உள்ளது. இது குறித்து மலைவாழ் மக்கள் சங்கத் தின் நிர்வாகி மணிகண்டன் தெரிவிக்கையில், தேர்தல் ஆணையம் அறிவித்த எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல முடியாமல் இருந்தது. பல துன்பங்களுக்கு மத்தியில் மலையில் வசிக்கும் மக்களிடம் விண்ணப்பங்களை வாங்கி தேர்தல் அதிகாரிகளிடம் கடைசி நாள் வரை கொடுத்து வந்தோம். தற்போது &nbsp;வெளியிட்டு உள்ள பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்று பார்க்க போதிய வசதி &nbsp;இல்லாமல் உள்ளனர். எனவே அனைத்து குடி யிருப்புகளுக்கும் நேரில் சென்று பெயர் களை சரிபார்க்க வேண்டும். பெயர் விடுபட்டு &nbsp;இருந்தால் மாற்று விண்ணப்பம் பெற்று &nbsp;இணைக்க வேண்டும். புதிய வாக்காளர் களை சேர்க்கவும் குடியிருப்பு பகுதிக்கு தேர் தல் அலுவலர்கள் வர வேண்டும் என்றார். &nbsp;(ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.