தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: வாலிபர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

26 May 2026, 12:53 am
பெட்ரோல் டீசல் விலை உயர்வு: வாலிபர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
<p><strong>பெட்ரோல் டீசல் விலை உயர்வு: வாலிபர்கள் நூதன ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, மே 25 –- பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்வை கண்டித்து சென்னையில் பெட்ரோல் பங்குகள் முன்பு வாலிபர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்தியாவில் கடந்த 10 நாட்களில் 4 முறை பெட்ரோலியப் பொருட்க ளின் விலையை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. மே 15ந் தேதி பெட்ரோல் லிட்ட ருக்கு 3.14 ரூபாயும், டீசல் 3.11 ரூபாயும் உயர்த்தப்பட் டது. இதன் தொடர்ச்சியாக 4வது முறையாக மே 25 அன்று பெட்ரோல் லிட்டரு க்கு ரூ.2.46 உயர்த்தப்பட்டு 107.77ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்த் தப்பட்டு, 99.55 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தென்சென்னை மாவட்டத்தில் இந்திய ஜன நயாக வாலிபர் சங்கத்தினர் பெட்ரோல் பங்குகள் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சைதாப்பேட்டையில் டயரை உருட்டியும், நுங்கு வண்டிகளை ஓட்டி வந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது பேசிய சங்கத் தின் மாநில பொருளாளர் தீ.சந்துரு, “பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து வரு கிறது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை 10 டாலர் குறைந்தபோதும், இந்தியாவில் லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்துவது ஏன்? பெட்ரோல் விலையில் 50 சதவீதத்தை ஒன்றிய, மாநில அரசுகள் வரியாக வசூலிக் கின்றன. எனவே, பெட்ரோ லிய பொருட்களின் விலையை திரும்ப பெறுவ தோடு, வரிகளையும் குறைக்க வேண்டும்” என்றார். மாவட்ட இணைச் செய லாளர் பாரதி தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், மாநிலக்குழு உறுப்பினர் நிவேதா, துணை த்தலைவர்கள் சிவக்குமார், ராஜ்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் மகேஷ் ஆகி யோர் பேசினர். தரமணி பழைய மகாபலி புரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் என்.குமரன், பொருளாளர் சிந்தன், செயற்குழு உறுப்பி னர் செங்கதிர், வேளச்சேரி பகுதி பொருளாளர் கிருஷ் ணன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.