நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் போராட்டம்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் போராட்டம்</strong></p>
<p>கோவை, ஜன.28- மாநில நெடுஞ்சாலை ஆணை யத்தை கலைத்திட வேண்டும் என வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் மாநிலம் முழுவதும் பறையிசை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைப்பணியாளர்களின் 41-மாத பணிநீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெற்று பணிக் காலமாக முறைப டுத்தி, ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணை யத்தை கலைத்திட வேண்டும். நெடுஞ்சலை பராமரிப்புப்பணியை அரசே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் முழுவதும் தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் செவ்வாயன்று பறையிசை முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக கோவை கண்காணிப்பு பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு, கோட்டத் தலைவர்கள் வி.சின்ன மாரிமுத்து (பொள் ளாச்சி), பி.முருகேசன் (கோவை), எம்.ராஜேந்திரன் (நீலகிரி), என்.முருகவேல் (கோபி) ஆகியோர் தலைமை வகித்தனர். கோபி கோட் டப் பொருளாளர் ஆர்.முருகன் வர வேற்றார். கோரிக்கைகளை விளக்கி கோட்டச் செயலாளர்கள் ச. ஜெகநாதன் (பொள்ளாச்சி), ஆர்.கருப்பசாமி (கோபி), பி.முருகன் (கோவை), ட.புவனேஸ்வரி (நீலகிரி) ஆகியோர் உரையாற்றி னார். மாநிலத் தலைவர் மா.பாலசுப் பிரமணியன் நிறைவுரையாற்றி னார். நிறைவாக பொள்ளாச்சி கோட்டப் பொருளாளர் டி.சந்திர போஸ் நன்றி கூறினார். சேலம் சேலம், குரங்கு சாவடி பகுதி யில் உள்ள கோட்டை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, கோட்டத் தலை வர்கள் ஜாகிர் உசேன் (நாமக் கல்), திம்மராசு (கிருஷ்ணகிரி), சிவ குமார் (தருமபுரி), சுப்பிரமணியன் (சேலம்) ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி எடப்பாடி கோட்ட செயலா ளர் மு.தங்கராசு உள்ளிட்ட கோட்டை செயலாளர்கள் பேசினர். போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். சங்க மாநிலச் செயலாளர் பா.ரவி சிறப்பு ரையாற்றினார். சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலா ளர் செல்வம் வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் சு.செந்தில் நாதன் நிறைவுரையாற்றினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
