நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்
12 Nov 2025, 3:20 pm
<p><strong>நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்</strong></p>
<p>பெரம்பலூநர், நவ.12 - தமிழகத்தில் சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதி மன்ற ஆணையின் படி பணிக் கால மாக முறைப்படுத்த வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற மேல் முறையீட்டை திரும்பப் பெற வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியை அரசே ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞர் களை சாலைப் பணியாளர்களாக நியமனம் செய்திட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நிய மனம் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் சாலைப் பணியா ளர்களின் குடும்பத்தினருக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சா லைத் துறை சாலைப் பணியா ளர்கள் சங்கத்தினர் சார்பில் நூத னப் போராட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் துறைமங்கலத் தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் நடைபெற்ற போராட் டத்திற்கு கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். கோட்ட துணைத் தலைவர் ப.சுப்ர மணியன், செயலாளர் சி.சுப்ர மணியன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாநில துணைத் தலை வர் மகேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நீதிமன்றத்தில் உள்ள நீதிதே வதை போன்று மூன்று ஊழியர்களை கண்களை கட்டி நிற்க வைத்து, ஒவ்வொரு கோரிக்கைகளையும் உரக்க கூறி, கும்மி அடித்து சுற்றி வந்து போராட்டம் நடத்தினர். கோட்ட பொருளாளர் மார்க்கண் டன் நன்றி கூறினார். திருச்சிராப்பள்ளி திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடந்த போராட்டத் திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளர்கள் சங்க கோட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்றார். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் சிவசங்கர், சாலை ஆய்வாளர்கள் சங்க சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்க இணை செயலாளர் ரமேஷ் பேசி னார். மாநில துணைத் தலைவர் மகேந்திரன் நிறைவுரையாற்றி னார். துணைத் தலைவர்கள் மலர் மன்னன், பிரான்சிஸ், இணை செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோட்டப் பொருளாளர் கோவிந்த ராஜன் நன்றி கூறினார். கரூர் நெடுஞ்சாலைத் துறை கரூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.செவந்திலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி, மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், நெடுஞ்சா லைத் துறை சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணி, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் கோபி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமமூர்த்தி, உட்கோட்ட தலைவர் வி.பழனிவேல், செயலா ளர் எம்.வெள்ளைச்சாமி, கரூர் உட்கோட்ட தலைவர் கே.எம்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஆர்.சிவக்குமார் நன்றி கூறினார்.</p>
