நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, டிச.23- பதவி உயர்வு வழங்கக்கோரி நெடுஞ்சாலைத்துறை ஊழி யர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நெடுஞ்சாலைத்துறையில் பதிவுறு எழுத்தர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், கண்காணிப்பாளர், ஆட்சி அலுவலர், கோட்ட கணக்கர் மற்றும் வரைவு பகுதி அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழி யர் சங்கத்தினர் கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் மாநிலச் செயலாளர் மா.கிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளர் கலா, நிர்வாகி திவாகர், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் எம். அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
