நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
13 Dec 2025, 5:13 pm
<p><strong>நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கோவை, டிச.13– காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூ தியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தினர் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் துணைத் தலைவர் ஆர்.மாலதிராணி தலைமை ஏற்றார். மண்டலச் செயலா ளர் பி.பத்மநாபன் கோரிக்கைகளை விளக்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செய லாளர் ஆர்.பிரகலாதா வாழ்த்திப் பேசினார். இதில், பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத் திருப்போருக்கு பணி வழங்கிட வேண்டும் ஆகிய முக்கிய கோரிக்கைகள் முழக்கங்களாக எழுப்பப் பட்டன.</p>
<p> </p>
