திருக்கோவிலூர் பெரிய ஏரியில் கழிவுகளை கொட்டும் நெடுஞ்சாலைத்துறை
28 May 2026, 12:05 am
<p><strong>திருக்கோவிலூர் பெரிய ஏரியில் கழிவுகளை கொட்டும் நெடுஞ்சாலைத்துறை</strong></p><p>திருக்கோவிலூர், மே 27– திருக்கோவிலூர் ஆசனூர் சாலை விரிவாக்கப் பணியின் போது அகற்றப்படும் கழிவுநீர் வாய்க்கால் மண்ணை, நகரின் முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஏரியில் நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டி வருகின்றனர். இதனால் நகரின் குடிநீர் ஆதாரம் மாசடைந்து, நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைக் கெடுக்கும் இச்செயலுக்குச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஏரியில் கழிவு மண் கொட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
