நெடுஞ்சாலைத்துறை பணியாளர் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம்
1 hour before

நெடுஞ்சாலைத்துறை பணியாளர் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம்

இராஜபாளையம், ஆக.20–தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் இராஜபாளையம் கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில் முதலமைச்சர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், அரசு முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பும் வகையில் இந்த இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோட்டத் தலைவர் குமார் பாண்டி தலைமை வகித்தார். உட்கோட்ட இணைச் செயலாளர் சங்ககிரி ராமன் வரவேற்றார். கோட்டப் பொருளாளர் முருகன் தொடக்க உரையாற்றினார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், கோட்ட இணைச் செயலாளர் ராஜேந்திரன், கோட்ட துணைத் தலைவர் பாலமுருகன், உட்கோட்டச் செயலாளர் முத்துமுனியாண்டி, உட்கோட்டத் தலைவர் மலை

யரசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.இயக்கத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் திருப்பதிராஜ் பேசினார். உட்கோட்ட துணைத் தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.