நெடுஞ்சாலைத் துறையில் தனியார்மயத்தைக் கைவிட்டு 5,000 நிரந்தர பணியிடங்களை நிரப்புக! சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்
16 Jun 2026, 10:38 pm

நெடுஞ்சாலைத் துறையில் தனியார்மயத்தைக் கைவிட்டு 5,000 நிரந்தர பணியிடங்களை நிரப்புக!

சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை, ஜூன் 16- நெடுஞ்சாலைத்துறையில் தனியார்மயக் கொள்கையைக் கை விட்டு, 5,000 நிரந்தரச் சாலைப்பணி யாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு வலி யுறுத்தியுள்ளது.

மதுரையில் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ் வேலையறிக்கையையும், பொருளா ளர் இரா.தமிழ் நிதி அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் சந்திர போஸ் கூட்டத்தைத் தொடங்கி உரை யாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், “கடந்த 25 ஆண்டு கால ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர் சிங் முறைகளால் கிராமப்புற இளை ஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலை ஆணையத்தைக் கலைத்துவிட்டு, நெடுஞ்சாலைகள் அனைத்தையும் துறையின் மூலமே நிர்வகிக்க வேண்டும். தனியார் சுங்கச்சாவடிகள் அமைப்பதைத் தடுத்து, சாலை பராமரிப் பிற்கு 5,000 நிரந்தரப் பணியாளர் களை நியமிக்க வேண்டும். மேலும், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி (23.10.2024), சாலைப்பணியாளர் களின் 41 மாத பணிநீக்க காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்தி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது.

ஜூன் 18 முதல் மனு இயக்கம்

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 18 முதல் 22 வரை சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்படவுள்ளது.

குறிப்பாக, புதிய அரசுக்கு வெளி யிலிருந்து ஆதரவளிக்கும் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஆட்சியில் பங்கேற் றுள்ள விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துச் சட்ட மன்றத்தில் இதற்காகக் குரல் எழுப்ப வலியுறுத்தவும், அக்டோபர் 10 அன்று திருச்சியில் மாநிலப் பேரவையைச் சிறப்பு மாநாடாக நடத்தவும் தீர்மா னிக்கப்பட்டது.