முந்தய பக்கம்

அசாமில் 85%, புதுச்சேரியில் 89% கேரளத்தில் 75% வாக்குகள் பதிவு

10 Apr 2026, 5:30 am
அசாமில் 85%, புதுச்சேரியில் 89% கேரளத்தில் 75% வாக்குகள் பதிவு

அசாமில் 85%, புதுச்சேரியில் 89% கேரளத்தில் 75% வாக்குகள் பதிவு

திருவனந்தபுரம், ஏப். 9 - 140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அசாம், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் வியாழனன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

3 மாநிலங்களிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதில், கேரள மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 75.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதேபோல அசாம் மாநிலத்தில் 84.42 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 89.34 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. யூனியன் பிரதேசத்தின் வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதத்தை புதுச்சேரி பதிவு செய்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram