மதுரை கிழக்கு- மேற்கு தொகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு, பயணியர் நிழற்குடை
17 Jan 2026, 2:42 pm
<p><strong>மதுரை கிழக்கு- மேற்கு தொகுதிகளில் உயர்கோபுர மின்விளக்கு, பயணியர் நிழற்குடை நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சு.வெங்கடேசன் எம்.பி. திறந்து வைத்தார்</strong></p>
<p>மதுரை, ஜன.17- மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20.4 லட்சத்தில் மதுரை கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை சு.வெங்கடேசன் எம்.பி., பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆவது வார்டில் கூடல்நகர் பேருந்து நிறுத்த பயணியர் நிழற் குடை, 17 ஆவது வார்டு எஸ்.ஆலங்குளம் மந்தை அம்மன் கோவில் திடலில் 3.60 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு, 4 ஆவது வார்டு பார்க் டவுன் பாமா நகர் - ரைஸ்மில் ஸ்டாப் சந்திப்பில் ரூ. 3.60 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு, 6 ஆவது வார்டு அய்யர்பங்களா மகா லட்சுமி நகர் சந்திப்பில் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு, 38 ஆவது வார்டு வண்டியூர் சௌராஷ்டிரா புரம் - தேனூர் மண்டபம் சந்திப்பில் ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் உயர்மின் கோபுர விளக்கு ஆகியவற்றை மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பு தி. நாகராஜன், 2வது வார்டு கவுன்சிலர் அமுதா முத்துபேர்கினி, 4 ஆவது வார்டு கவுன்சிலர் நந்தினி கொடி வைரவன், 6 ஆவது வார்டு கவுன்சிலர் பொன்.பால்ச்செல்வி பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் எஸ். கே. பொன்னுத் தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ஜீவானந்தம், கிழக்கு மண்டல குழு செய லாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மண்டலக்குழு உறுப்பினர்கள் எஸ்.நாகராஜன், எஸ். ஜாபர், ஏ.ராஜேந்திரன் கே.முருகன்,ஜி.எஸ். ஜெகனாதன், கே.செல்வம் மற்றும் பலர் பங்கேற்றனர்.</p>
<p> </p>
