தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை!

10 Jul 2026, 8:36 pm
திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை!

திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை!

சென்னை, ஜூலை 10 - தேர்தல் வழக்குகள் நிலுவை யில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பா சமுத்திரம் ஆகிய 5 தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறி விக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்த லில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி காலியாக உள்ளது. அதே போல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பா சமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் பதவி களை ராஜினாமா செய்ததால், இந்த 4 தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன.

நெல்லையைச் சேர்ந்தவர் பொதுநல வழக்கு!

இதனிடையே, ராஜினாமா செய்த 5 பேரின் வெற்றியை எதி ர்த்து, தேர்தல் வழக்குகள் நிலுவை யில் உள்ளதால், இந்த தொகுதி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று திரு நெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையைச் சேர்ந்த வெங்கடா ஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத் தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசார ணைக்கு வந்தது.

முன்னுதாரணமான உச்சநீதிமன்ற தீர்ப்புகள்!

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என வேட்பாளர்கள் கோரிக்கை முன்வைப்பதுண்டு. இடைத்தேர் தல் நடத்தி எம்எல்ஏ-வைத் தேர்ந் தெடுத்த பின், தேர்தல் வழக்கை தாக்கல் செய்த வேட்பாளரை வெற்றி பெற்றவராக நீதிமன்றம் அறிவித்து விட்டால், ஒரு தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதி என்ற நிலை ஏற் படும் என்பதால், தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை சம்பந்தப்பட்ட தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் 1967 முதல் 2018ஆம் ஆண்டு வரை பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனால் தேர்தல் வழக்குகளில் முடிவெடுக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது’ என வாதங்களை முன்வைத்தார். தமிழக அரசுத் தரப்பில் எதிர்ப்பு இதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘தேர்தல் வழக்குகள் குறித்த ஆவ ணங்கள் இன்னும் தேர்தல் ஆணை யத்துக்கு வந்துசேரவில்லை. அத னால், இந்த வழக்கில் நிலைபாட்டை தெரிவிக்க இயலாது’ என கூறப்பட்டது. தமிழக அரசின் தரப்பில் ஆஜ ரான தலைமை வழக்கறிஞர், “தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே முதல் வர் விஜய் உள்ளிட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ள னர். அவர்கள் ராஜினாமா செய்யும் போது எந்த தேர்தல் வழக்கும் நிலு வையில் இல்லை” என தெரிவித் தார். “வேட்பாளர்களின் ராஜினா மாவை உரிய ஆய்வுக்குப் பின் சபாநாயகர் ஏற்றுக்கொண்டிருப்ப தாகவும், இந்த வழக்கில் உத்தர விட்டால், அது தேர்தல் நடவடிக்கை களை பாதிக்கும்” எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட சிக்கல் ஏற்படும்

அதேபோல, முதல்வர் விஜய் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் வாக்காளராக இல்லாத மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்ய அடிப்படை உரிமை இல்லை. இடைத்தேர்தல் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும்” என வாதிட்டார். இந்த அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், “ஜன நாயக நடைமுறையின் புனிதம் சம்ப ந்தப்பட்ட இந்த வழக்கில் மனுதா ரரின் அடிப்படை உரிமை தொடர் பாக எழுப்பப்படும் கேள்வி பொருந்தாது; தேர்தல் வழக்கு முடி வுக்கு வரும் முன்பே, அந்த தொகு திக்கு இடைத்தேர்தல் நடத்துவது அரசு பணம் செலவிடப்படுவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியலமைப்புச் சட்டச் சிக்க லுக்கு வித்திடும். தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப் பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங் களைப் பொறுத்தவரை, அதனை ஆராய வேண்டியுள்ளது” என்று தெரிவித்தனர்.

ஜூலை 31-க்கு தள்ளிவைப்பு

முடிவாக, இந்த வழக்கு தொடர் பாக இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசு, சட்டப்பேரவைச் செய லாளர், முதலமைச்சர் விஜய், எம்எ ல்ஏ-க்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தர விட்டு, வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.