தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் நகை–பணம் முறைகேட்டை விசாரிக்க ஆணையம் அமைத்தது உயர்நீதிமன்றம்

26 Dec 2025, 4:32 pm
பிள்ளையார்பட்டி  விநாயகர் கோவில் நகை–பணம் முறைகேட்டை விசாரிக்க ஆணையம் அமைத்தது உயர்நீதிமன்றம்
<p><strong>பிள்ளையார்பட்டி &nbsp;விநாயகர் கோவில் நகை&ndash;பணம் முறைகேட்டை விசாரிக்க ஆணையம் அமைத்தது உயர்நீதிமன்றம்</strong></p> <p>ஜன.30-க்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு</p> <p>மதுரை, டிச. 26 - சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறக்கட்டளைக்கு சொந்த மான நகை மற்றும் பணம் முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்காக நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு, அறக்கட்டளை நிதியில் ரூ.1 கோடியே 71 லட்சம் முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தண்ணீர்மலை, முத்து ராமன், அழகு நாராயணன், அருணாச்சலம், சுவாமிநாதன், பாலமுருகன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தி ருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று &nbsp;நீதிபதி ஸ்ரீமதி முன்பு நடைபெற்றது. அப்போது, பிள்ளையார்பட்டி கோவிலின் முன்னாள் அறங் காவலர்கள் ரூ.1 கோடியே 76 லட்சம் அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள ஆணையம் அமைப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, அறக்கட்டளையின் கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரன் மற்றும் மற்ற விவரங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் ஆகியோரை கொண்ட விசார ணை ஆணையம் அமைக்கப்படுகிறது. விசாரணையில்,கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளை கையாள அறங் காவலர்களுக்கு அதிகாரம் உள்ளதா? அறக்கட்ட ளைக்கு சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளனவா? கோவிலின் தங்க நகை கள், வெள்ளி நகைகள் மற்றும் பிற பொருட்கள் சரியான நிலையில் உள்ளனவா? என்பன உள்ளிட்ட விவகாரங்களை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் யாரேனும் தங்களது கருத்துகளை வாக்குமூலம் அளிக்க விரும்பினால், ஓய்வு பெற்ற நீதிபதியிடம் நேரடியாக தெரிவிக்கலாம் என்றும், அனைத்து அறங்காவ லர்களிடமும் விசாரணை நடத்த ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை ஜனவரி 30-க்குள் ஓய்வு பெற்ற நீதிபதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய விதிக்கப் பட்ட தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.