தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள சுரேஷ் கோபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

1 Apr 2026, 4:02 pm
தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள சுரேஷ் கோபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
<p><strong>தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள சுரேஷ் கோபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு</strong></p> <p>கொச்சி ஒன்றிய பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி திருச்சூர் மக்களவைத் தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்திய தாகவும், அவரது எம்பி பதவியை ரத்து செய்யக்கோரியும் தொடரப்பட்ட வழக்கின் &nbsp;விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஏ.எஸ்.பினோய் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சுரேஷ் கோபி தாக்கல் செய்த துணை மனுவை உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி அமர்வு நிராகரித்தது. சுரேஷ் கோபி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. திருச்சூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, தேர்தல் பிரச் சாரத்தின் போது மதச் சின்னங்களைப் பயன் படுத்தி வாக்காளர்களை திசைதிருப்ப முயன்றதா கவும், எனவே தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. மனு வுடன் புகைப்படங்களையும் காட்சிப்பதிவுக ளையும் சமர்ப்பித்திருந்தார். இந்த மனு சட்டப் படி செல்லுபடியாகாது என்ற சுரேஷ் கோபி யின் வாதத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மக்களவைத் தேர்தலில் எல்டிஎப் வேட்பாள ராக இருந்த வி.எஸ். சுனில்குமார், உயர்நீதி மன்றத்தின் தலையீடு வரவேற்கத்தக்கது என்று பதிலளித்தார். சுரேஷ் கோபி மதத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், வாக்காளர்க ளை திசைதிருப்ப பணம் மற்றும் பரிசுகளை வழங்கியும் பிரச்சாரம் செய்தார். குற்றச்சாட்டு களுக்கு ஆதரவான அனைத்து ஆதாரங்க ளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுவிட்டதாக சுனில் குமார் கூறி னார். மேற்கொண்டு நடைபெறும் நடவடிக்கை கள் பலனளிக்கும் என அவர் நம்பிக்கை தெரி வித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.