தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘கேரளா ஸ்டோரி 2’ டீசரை நீக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு திரைப்படத்தை பார்க்கவும் முடிவு

24 Feb 2026, 3:55 pm
‘கேரளா ஸ்டோரி 2’ டீசரை நீக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு திரைப்படத்தை பார்க்கவும் முடிவு
<p><strong>&lsquo;கேரளா ஸ்டோரி 2&rsquo; டீசரை நீக்குமாறு தயாரிப்பாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு திரைப்படத்தை பார்க்கவும் முடிவு</strong></p> <p>கொச்சி, பிப்.24- சுதிப்தோ சென் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் முதல் பாகம் வெளி யானது. இதில் கேரளாவில் இருந்து மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் (பயங்கரவாத அமைப்பு) அமைப்பில் சேர்க்கப்பட்ட பெண்கள் குறித்து வகுப்புவாத சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றன. &nbsp;மத நல்லிணக்கத்தின் அடை யாளமாக இருக்கும் கேரள மாநி லத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக - ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பல் இந்த திரைப் படத்தை வெளியிட்டுள்ளது என நாடு முழுவதும் கண்டனம் குவிந்தது. இந்நிலையில், கேரளா ஸ்டோ ரியின் இரண்டாம் பாகமான &lsquo;கேரளா ஸ்டோரி 2 : கோஸ் பியாண்ட்&rsquo; படத்தின் டீசர், டிரெய்லர் சமீபத்தில் வெளி யானது. இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. &nbsp;டீசரில் இந்துப்பெண்கள் வலுக் கட்டாயமாக மாட்டிறைச்சி உண்ண வைக்கப்படுவது போன்ற &nbsp;காட்சிகள் இடம் பெற்றது பெரும் &nbsp;அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கு இத்தகைய சூழலில் &lsquo;கேரளா ஸ்டோரி - 2&rsquo; படத்தின் டீசரை ரத்து &nbsp;செய்யக் கோரியும், படத்தின் வெளி யீட்டை நிறுத்தக் கோரியும், திருச்சூரை சேர்ந்த வழக்கறிஞர் கே.வின்சென்ட் என பல்வேறு நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். படத்திற்கு தணி க்கை வாரியம் ஒப்புதல் அளித்தது சட்டவிரோதமானது என்றும் மனு வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த &nbsp;வழக்கு செவ்வாயன்று உயர்நீதி மன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. &nbsp;இருதரப்பு வாதத்திற்குப் பின்பு உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ்,&rdquo;கேரளா முழுமையான நல்லி ணக்கத்துடன் வாழ்கிறது. ஆனால், கேரளா முழுவதும் வகுப்புவாத சம்பவங்கள் நடப்பதாக நீங்கள் (தயா ரிப்பாளர்கள்) படத்தில் சித்தரித்துள் &nbsp;ளீர்கள். இது தவறான அறிகுறி யாகும். மேலும் இது உணர்ச்சியைத் தூண்டும். பொதுவாக, நான் எந்தப் படத்திலும் தலையிடுவதில்லை. கலைக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால், படத்தில் உள்ள சர்ச்சைக் குரிய காட்சிகளை, உண்மைச் சம்ப வங்களால் ஈர்க்கப்பட்டு, கேரளா என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இது ஏன்? என கேள்வி எழுப்பினார். படத்தைப் பார்த்த பிறகு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தயாரிப் பாளர் தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி,&rdquo;இந்த படம் வகுப்பு வாத பதற்றத்தை ஏற்படுத்தும். நான் நாளை படத்தைப் பார்ப்பேன். நாளை நீங்கள் படத்தின் திரையிடலை ஏற் பாடு செய்யலாம். படத்தின் உள்ளட க்கம் வெறுப்பு பேச்சுதானா, அது வேண்டுமென்றே கேரளாவை அவ தூறு செய்ய முயற்சிக்கிறதா என்பதை ஆராய வேண்டும். படத்தை திரையிட முடியுமா என்பது குறித்த வழிமுறை களைப் பெறுங்கள். ஆனால் இந்த மனுவை பயனற்றதாக மாற்ற முடியாது&rdquo; என்று உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் &nbsp;காட்டமாக உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.