அனைத்து சமூகத்தினரும் வழிபட உரிமை உண்டு தொப்புலாக்கரை இறங்கி முத்தம்மன் கோவில் குறித்தஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாதர் சங்கம் வரவேற்பு
7 Aug 2026, 10:59 pm

அனைத்து சமூகத்தினரும் வழிபட உரிமை உண்டு தொப்புலாக்கரை இறங்கி முத்தம்மன் கோவில் குறித்தஉயர்நீதிமன்ற உத்தரவுக்கு மாதர் சங்கம் வரவேற்பு

விருதுநகர், ஆக.7-விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், தொப்புலாக்கரை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ளது இறங்கி முத்தம்மன்கோவில். இதில் அனைத்து சமூகத்தினரும் எவ்வித பாகுபாடுமின்றி வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு பிரிவைச் சேர்ந்த சமூகத்தினர் குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் கோவில் திருவிழாவிற்கான வரியைவசூல் செய்ய மறுத்தனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே வழிபாடு குறித்த பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து திருவிழா நடத்தமறுத்து வந்தனர். மேலும், கோவிலில் உள்ள ஒலி பெருக்கியில் மணிக்கொருமுறை குறிப்பிட்ட சில சமுதாயத்தினருக்கு மட்டுமே கோவில் பாத்தியப்பட்டது என தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்பட்டது. மேலும் சுற்றுச் சுவரிலும் 6 சமூகத்தினருக்கு சொந்தமான கோவில் எனவும் கல்வெட்டும் வைக்கப்பட்டது.

இப்பிரச்சனை குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்கவனத்திற்கு ஊர் மக்கள் கொண்டுவந்தனர். இதையடுத்து, ஒலி பெருக்கியில் வரும் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க வேண்டும். கல்வெட்டை அகற்ற வேண்டும். அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து திருவிழாநடத்த அனுமதிக்க வேண்டும் எனவலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில்2025 செப்டம்பர் 5 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

2026 பிப்ரவரி 25 அன்று எம்.ரெட்டியபட்டியில் கிராம மக்கள் பங்கேற்புடன் போராட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் கே.பாலபாரதி, மாநில பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகியோர் பங்கேற்றனர். அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, 2026 ஜூலை1 இல்இறங்கி முத்தம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த முயற்சித்த போது, மாநிலப் பொதுச்செயலாளர் அ. ராதிகா, மத்தியக் குழு உறுப்பினர் லட்சுமி, மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் அராஜகமான முறையில் கைதுசெய்தனர்.

கே.பாலபாரதியை ஊருக்குள் நுழைய விடாமல் ஏராளமான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஒன்றிணைந்து திருவிழா நடத்த உத்தரவு இதையடுத்து ஜூலை 6 இல் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. முடிவில், தொப்புலாக்கரை கிராமத்தில் உள்ள இறங்கிமுத்தம்மன் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும், இது தனி நபருக்குசொந்தமான கோவில் இல்லை என்றும், ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்யக் கூடாது. சுவற்றில் ஏதும்எழுதக் கூடாது. அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்த வேண்டும் என்று கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றமதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்தனர்.

மேலும் சில சமூகத்தினர் மட்டும்திருவிழா நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென அதில் தெரிவித்திருந்தனர். வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்ற நீதிபதி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியரின் உத்தரவு செல்லும். இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் சென்று வழிபட உரிமை உள்ளது. ஒரு சில சமூகத்தினர் மட்டும்தனியாக திருவிழா நடத்த அனுமதியில்லை.

தனியாக பதாகைகள், ஒலிபெருக்கி வைத்து உரிமை கொண்டாடக் கூடாது. கோவில் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சனையை சிவில்நீதிமன்றத்திற்கு சென்று உரிமையை நிலை நாட்டிக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. மேலும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவை மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறைநிர்வாகங்கள் உறுதியாக அமல்படுத்திட வேண்டுமென மாதர் சங்கவிருதுநகர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.