நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
2 Oct 2026, 10:10 pm

நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

நாகர்கோவில்,அக்.2-கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றக் கட்டிடங்களின் பராமரிப்பு மற்றும் புதிய கட்டிடங்கள் தொடர்பான பணிகளை சென்னை உயர்நீதிமன்றநீதிபதி ஜி. இளந்திரையன் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் தற்போதைய நிலை, மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள், நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய கட்டிடப் பணிகள் குறித்துவிரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி கா. தனசேகரன்,அனைத்து சார்பு நீதிபதிகள், அனைத்து உரிமையியல் நீதிபதிகள் மற்றும் அனைத்து குற்றவியல் நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசுவழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீதிமன்றக் கட்டிடங்களின் பராமரிப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்வது, நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்படுத்துவது மற்றும் புதிய கட்டிடங்களுக்கான பணிகளை விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு நீதிபதி விரிவாக ஆலோசனை வழங்கினார்.நீதிமன்ற வளாகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான சிறந்த வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.