பாலியல் உறவு குறித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து சட்டவிரோதம்
15 Nov 2025, 4:09 pm
<p><strong>பாலியல் உறவு குறித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து சட்டவிரோதம்</strong></p>
<p>மதுரை, நவ.15 - திருமணம் செய்து கொள்வதாக தவறான வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொண்டு ஏமாற்றி விட்டதாகப் பெண் ஒருவர் அளித்த புகா ரில், இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஒருவர் அளித்த உத்தரவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதியின் இந்த உத்தரவு மற்றும் வழக்கில் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டவிரோத வார்த்தைகளைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் மாநிலத் தலைவர் செல்வராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ். கார்த்திக் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ள னர். அந்த அறிக்கையில், “பரஸ்பர சம்மதத்து டன் பாலியல் உறவு கொண்டு, பின்னர் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்தால் குற்றவியல் வழக்கு தொடர முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ‘பாலியல் உறவு பரஸ்பர விருப்பத்திலா அல்லது திருமண எதிர்பார்ப்புக்காகவா?’ என் பதை நீதிமன்றம் உறுதியாகத் தீர்மானிக்க முடி யாது எனக் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீதி மன்றத்தில் இதுபோன்று ‘கட்டப்பஞ்சாயத்தில்’ பேசப்படும் வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது சரியானதல்ல” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, திருமணம் செய்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்தவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பை அளித்து, உண்மையில் பாதிக் கப்பட்ட பெண்களுக்கு நீதியை மறுக்கும் செயல் என்று வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நீதி மன்றம் இத்தகைய வழக்குகளை உறவு முறிவாக மட்டுமே பார்த்தால், சட்டத்தின் மீதான பெண்களின் நம்பிக்கை குறையும் என்றும் அவர்கள் எச்சரித் துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதி கரித்துள்ள இச்சூழலில், இத்தகைய தீர்ப்புகள் குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுத்து, பெண் களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் கேள்விக்குறியாக்கும். நீதிபதிகள் தங்கள் சொந்த மன விருப்பத்தின் அடிப்படையில் கருத்து களைக் கூறாமல், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. எனவே, பெண்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கு உள்ளது என்ப தைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதியின் இந்தத் தீர்ப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது.</p>
