‘ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் நூல் வாசிப்பு நிகழ்ச்சி
24 Jul 2026, 12:05 am
<p><strong>‘ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் நூல் வாசிப்பு நிகழ்ச்சி</strong> </p><p>சென்னை, ஜூலை 23– நீதி, நட்பு மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் சிறுநீரகப் புற்றுநோய் நிபுணரான டாக்டர் வி. ஸ்ரீனிவாஸின் புதிய சட்டத் த்ரில்லர் நாவலான A Tale of Two Friends நூலின் சிறப்பு வாசிப்பு நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலை ‘ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 25) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கதை, இந்தியாவில் சிறுவயது நண்பர்களாக இருந்து தற்போது நியூயார்க் நகரில் வசிக்கும் இரு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது. ஒருவரான குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மருத்துவர், மற்றொருவரான ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் வழக்கறிஞர். சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைக்கு ஆளான மருத்துவர், தன்னை சட்டரீதியாக காப்பாற்ற தனது நண்பரான வழக்கறிஞரை நாடுகிறார். அதன் பின்னர் நடைபெறும் நீதிமன்றப் போராட்டங்களும், அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புகளும் கதையுடன் அழகாக பின்னிப் பிணைந்து, எதிர்பாராத திருப்பத்துடன் கதை நிறைவடைகிறது.</p>
