தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

11 Nov 2025, 3:41 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

ஹிஸ்புல்லா தளபதி படுகொலை : போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல்

இஸ்ரேல் ராணுவம் லெனான் உடன் ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை மீறி அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான லெபனான் மக்களை மீண்டும் அவர்களது இருப்பிடத்தை விட்டு துரத்தியுள்ளது இஸ்ரேல்.  இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி சமீர் அலியை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. இந்த தாக்குதல்  இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையில் மீண்டும் போராக வெடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

பங்வோங் புயல் : மக்கள் வெளியேற்றம்

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள பங்வோங் வெப்பமண்டல புயல் தைவானை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதிக்கும் பகுதிகளில் இருந்து 3,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்புயல் ஞாயிற்றுக்கிழமையன்று பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்தபோது 18 பேர் பலியானார்கள். தைவானில் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 108 - 137 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மீதான வழக்கு : நவம்பர் இறுதிக்குள் தீர்ப்பு?

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகளில் இம்மாத இறுதியில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக வங்கதேச வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் போராட்டத்தில் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது, துப்பாக்கிச் சூடு நடத்தியது என பல மனிதாபிமானக் குற்றங்களை அவர் நடத்தியதாக அவர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பு அறிவிப்பதற்கான தேதி நவம்பர் 13 அன்று நீதிமன்றம் நிர்ணயிக்க உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்.நீதிமன்றத்தில் வெடிகுண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 இல் அந்நாட்டில் பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிதி உதவியில் மாலத்தீவில் விமான நிலையம்

மாலத்தீவில் 7 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய நிதியுதவியுடன் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த சர்வதேச விமான நிலையத்தினை ஜனாதிபதி முகமது முய்சு திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் மாலத்தீவின் வடக்கு பகுதியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் உலகளாவிய இணைப்பை மேம்படுத்துவதற்கும் முக்கிய பங்காற்றும். இது சுற்றுலா, விவசாயம், மீன்பிடித்தல் என பொருளாதார மாற்றத்திற்கான சின்னம் என முய்சு தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.