தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ ஒரு யுகத்தின் குறியீடு.’’ - பேரா பெ.விஜயகுமார்

6 Jun 2026, 8:35 pm
“ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ ஒரு யுகத்தின் குறியீடு.’’ - பேரா பெ.விஜயகுமார்

“ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ ஒரு யுகத்தின் குறியீடு.’’ - பேரா பெ.விஜயகுமார்

ஹெப்ஸிபா ஜேசுதாசன் (1925-2012) பர்மாவில் பிறந்தவர். கன்னியாகுமரி மாவட்டம் புலிப்புனம் கிராமம் சொந்த ஊர். ஆசிரியர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த ஹெப்ஸிபா ஆங்கிலம் இலக்கியம் கற்று திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். கணவர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர். இவர்கள் இணைந்து தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய பணி சொல்லில் அடங்காது. இருவரும் சேர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக எழுதிய ஆங்கில நூல் தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வழங்கிய மிகப் பெரிய கொடையாகும்.

ஹெப்ஸிபா புத்தம் வீடு, அனாதை, டாக்டர் செல்லப்பா, மாநீ ஆகிய நான்கு நாவல்கள் எழுதி தமிழ் புனைவிலக்கிய உலகில் தனக்கென தனியிடம் பிடித்துள் ளார். ‘புத்தம் வீடு’ லிஸ்ஸி லீகசி (Lissy Legacy) என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

‘விளக்கு விருது’ பெற்றுள்ள ஹெப்ஸிபா பாரதியாரின் குயில் பாட்டு, சங்க இலக்கியமான நெடு நல்வாடை இரண்டையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். “ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘புத்தம் வீடு’ நாவல் வெறும் காதல் கதை அல்ல. ஒரு யுகத்தின் குறியீடு” என்று பாராட்டு கிறார் அம்பை.

இது மண்ணின் மணத் துடன் வட்டார மொழியில் எழுதப்பட்ட யதார்த்தவாத நாவல். ‘டாக்டர் செல் லப்பா’ நாவல் தமிழின் முதல் இருத்த லியல் நாவல் என்று கொண்டாடப்படு கிறது. ஹெப்ஸிபாவை ஆங்கில நாவலா சிரியர் ஜேன் ஆஸ்டினுக்கு இணையா கவைத்துக் கொண்டாடுவோரும் உண்டு. இவ்விருவரும் தாங்கள் நன்கறிந்த குடும்ப உறவுகளில் எழும் நெருக்கடிகள், விரிசல்கள், அன்புமிகு தருணங்கள் பற்றி மட்டுமே எழுதினர்.

புற உலகில் நடக்கும் சமூக, அரசியல் நிகழ்வுகளை முற்றிலும் தவிர்த்தனர். மனித மனங் களின் பலத்தையும், பலவீனத்தையும் தங்கள் நாவல்களில் சித்தரித்தனர்.

ஆண்-பெண் உறவில் ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலங்கள் ஆகியனவே இவர் கள் நாவல்களின் கருப்பொருளாயின. ‘புத்தம் வீடு. கன்னியா குமரி மாவட் டத்தின் பனையேறும் நாடார் குல மக்க ளின் வாழ்வியலைச் சித்தரிக்கும் நாவ லாகப் பரிணமிக்கிறது.

பனை மரங்கள் அடர்ந்திருக்கும் பனைவிளை ஊரின் அழகை, பெருமைகளை வியந்து விவரிக் கும் நாவலின் தொடக்க வரிகள் கவித்துவ மானவை. “பனைவிளையில் கண்ணுக்கு எட்டிய தூரம் எல்லாம் பனைமரக் காடு. இடையிடையே ஓலைகளின் சலசலப்பு. அதனூடே வேறு ஒரு ஒலி.

ஒரு மட்டை யை இன்னொரு மட்டையால் அடித்து விளையாடுகிற மாதிரி. பனை மரமென் றாலும், அப்பப்பா! சில வேளைகளில் பார்க்கப் பயமாக இருக்கும். இப்படி ஒரு உயரம் எங்கேயிருந்து வந்தது மரத் துக்கு? மரங்களிடையே ‘கோலியாத்’ எனலாம் பனை மரத்தை.....” என்றெழுதி நாவலின் சூழலை அழகுறச் சித்தரிக் கிறார். பனைவிளைக்குள் வாசகர்களைக் கைப்பிடித்து கூட்டிச் செல்கிறார்.

பனைவிளை ஊரில் இருக்கும் ‘புத்தம் வீடு’ என்ற பழைய, பாழடைந்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் மட்டுமே கதைக் களமாகின்றன. வாழ்ந்து கெட்ட அந்த வீட்டின் தலைவர் பெரியவர் கண் ணப்பச்சி புத்தம் வீட்டின் முகப்பில் உள்ள அடிக்கூட்டைத் தாண்டி வெளிவருவதில் லை. அவரின் குரலுக்கு மறுகுரல் கொடுப் பது பேத்தி லிஸி மட்டுமே

. அவள் பனை விளை புத்தம் வீட்டின் குல விளக்கு. கண்ணப்பச்சியின் மூத்த மகன் குடிகாரன். கதையின் நாயகி லிஸியின் அப்பன். இளைய மகன் என்ன செய்கிறான் என்று குடும்பத்தில் யாருக்கும் தெரியாது.

லில்லி இளையவனின் மகள். லிஸி யைவிட பத்து வயது இளையவள். வீட்டின் மருமகள்கள் இருவரும் வாயில் லா ஜீவன்கள். குடும்பத்துக்கான ஒரே வருமானம் அவர்களுக்குச் சொந்தமான பனை மரங்களிலிருந்து கிடைக்கும் பனைப் பொருட்கள் மட்டுமே

. இதனைப் போற்றிப் பாதுகாப்பதில் குடும்பத்தில் இருந்த ஆண்கள் யாருக்கும் அக்கறை யில்லை. அவர்களுக்குச் சொந்தமான பனை மரத்திலிருந்து அக்கானி (பதநீர்) இறக்கும் பனையேறி தங்கையனின் குடும்பம் புத்தம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கிறது. அக்கானியைக் காய்ச்சி வீட்டுப் பெண்கள் கருப்பட்டி செய் கிறார்கள்.

பனையேறி தங்கையன் நல்ல உழைப்பாளி. புத்தம் வீட்டுக்குப் பக்கத் தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடும் கட்டிக்கொள்கிறான். அவன் மகன் கள் தங்கராஜ், செல்லப்பன் இருவரும் தகப்பனைப் போலவே நல்ல உழைப் பாளிகள்.

லிஸியும், தங்கராஜும் சிறு வயதில் பள்ளித் தோழர்கள். லிஸி பெரியவள் ஆனதும் படிப்பை நிறுத்துகிறார்கள். ’இற்செரிப்பு’ எனும் கன்னிப் பெண்களை வீட்டில் அடைத்து வைக்கும் பழக்கம் வீட்டில் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

லிஸியின் அப்பனும், சித்தப்பனும் சம்பாதிக்க வக்கில்லாவிட்டாலும் வீட்டில் அராஜகம் புரிகிறார்கள். புத்தம் வீடு பெண்களுக்கு சிறையாகிறது. காலச் சக்கரம் சுழலு கிறது

. இந்தியா விடுதலை பெறுகிறது. திருவிதாங்கூர் - தமிழ்நாடு போராட்டம் நடைபெறுகிறது. இவற்றின் சுவடுகள் எல்லாம் வீட்டில் தெரியவில்லை. லிஸிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். பனைவிளைக்கு அருகிலிருக்கும் ஒரு டாக்டர் பெண் பார்க்க வருகிறார்.

லிஸியைப் பார்க்க வந்தவர் லில்லியை கட்டிக்கொள்கிறேன் என்கிறார். அதெப் படி அக்கா வீட்டிலிருக்க தங்கைக்கு திரும ணம் முடிக்க முடியும்? லில்லியைவிட இருபது வயது மூத்தவர். மணப்பெண் ணின் சம்மதம் எல்லாம் யார் கேட்கிறார் கள். டாக்டரிடம் பணம் கொட்டிக் கிடக் கிறது.

புத்தம் வீட்டுக் கடனையெல்லாம் அடைக்கிறேன் என்கிறார். சகோதரர் களுக்குள் பகைமை மூள்கிறது. வீட்டில் ஒரே குழப்பம். பனைவிளை சர்ச் உபதே சியர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டாக் டர் வெற்றி பெறுகிறார். லில்லியுடனான திருமணம் இனிதே நடக்கிறது.

பஞ்சும், நெருப்பும் பக்கத்திலிருந் தால் பற்றிக்கொள்ளும் தானே! தங்கராஜ் - லிஸி காதல் மலர்கிறது. தங்கராஜ் பனை யேறி என்பதால் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருக்கும் என்றெண்ணி லிஸி திகைக்கிறாள். குடும்பப் பெருமையும், வர்க்க பேதமும் முன்னிற்கும். தன் காத லை அப்பனும், சித்தப்பனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதறிந்து நடுங் குகிறாள். தங்கராஜ் திருமணத்திற்கு நெருக்குகிறான்.

இந்நிலையில் புத்தம் வீட்டில் இடியென இறங்குகிறது ஒரு கொடூர சம்ப வம். லிஸியின் சித்தப்பா வீட்டில் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக்கிடக்கிறார். போலீஸின் சந்தேகம் இருவர் மீது விழுகிறது. லிஸியின் அப்பாவும், காத லன் தங்கராஜும் கைதாகிறார்கள். கொலை வழக்கின் திசை மாறுகிறது. லிஸி யின் அப்பா விடுதலை ஆகிறார். நடைப் பிணமாக வெளிவருபவர் சிறிது நாளில் இறந்துவிடுகிறார்.

கொலை குறித்த மர்ம முடிச்சு அவிழ்கிறது. கொலை செய்தது இறந்து போன லிஸியின் அப்பாதான் என்று தெரியவருகிறது. தங்கராஜ் விடுத லையாகிறான். லிஸி-தங்கராஜ் திரும ணம் இனிதே நடக்கிறது. தங்கராஜ் – லிஸி இணையர் உழைப்பில் புத்தம் வீடு புத்துயிர் பெறும்தானே!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.