கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் புதுப்பிப்புப்பணிகள்
28 Jan 2026, 2:33 pm
<p><strong>கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் புதுப்பிப்புப்பணிகள்</strong></p>
<p>நாமக்கல், ஜன.28- பள்ளிபாளையத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள மேம்பாலத்தை முழுமையாக புதுப்பித்து தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் நடுவே இரண்டு காவிரி ஆற்றுப் பாலங்கள் அமைந்துள் ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பாக கட்டப்பட்ட ஒரு பாலமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட புதிய காவிரி ஆற்று மேம்பாலம் என இரண்டு பாலங் கள் உள்ளது. இந்நிலையில் பள்ளிபாளை யம் நான்கு ரோடு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிகவும் குறு கலான சாலையில் அதிகளவு வாக னங்கள் சென்று வருவதினால், அடிக்கடி போக்குவரத்து பாதிப் பும், பள்ளி கல்லூரி செல்லும் வாக னங்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது. இதனையடுத்து புதிதாக மேம்பா லம் அமைத்து தரவேண்டும் என பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கடந்த அதி முக ஆட்சி காலத்தில் மேம்பா லம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது. நிதி பற்றாக் குறை உள்ளிட்ட பல்வேறு காரணி களால் சுமார் நான்கு ஆண்டுக ளுக்கு மேலாக பாலக்கட்டுமான பணிகள் நடைபெற்றது. இந்நிலை யில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப் பீட்டில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலம் துவக்கத்திலிருந்து திருச்செங்கோடு சாலை ஆலாம் பாளையம் வரை கிட்டத்தட்ட 3 கிலோமீட்டர் நீளத்திற்கு மேம் பாலம் கட்டப்பட்டு, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக அமைச் சர் மதிவேந்தன், எம்பிக்கள் மாதேஸ்வரன், பிரகாஷ் ஆகி யோர் முன்னிலையில் பாலம் மக் கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப் பட்டது. பாலம் திறப்பு விழாவின் போது பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, தரமான முறையில் இருப்பதாகவும், இருந்த போதும் இதுகுறித்து கட்டிட கட்டுமான பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வர் என தெரி வித்திருந்தார். மேலும் பாலத்தின் மேலே கன ரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்க ளும் சென்று வரும் நிலையில், பாலப்பணியின் நிறைவு பகுதி யாக பாலத்தின் தூண் பகுதி உள் ளிட்ட இடங்களில் பெயிண்ட் அடிப் பதற்காக, பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் இரண்டு தூண்களில் மட்டும் மாதிரி பெயிண்ட் அடிக்கப்பட்டு நெடுஞ் சாலைத்துறை ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அதன் பிறகு எவ் வித முன்னேற்றமும் இல்லாமல், பாலம் புதுப்பிப்புப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே கட்டி முடிக்கப்பட்டு மக் கள் பயன்பாட்டிற்கு விடப்பட் டுள்ள பாலத்தை முழுமையாக புதுப்பித்து தர வேண்டும். உள்ளூர் பொதுமக்களும் பாலத்தை முறை யாக பயன்படுத்தும் வகையில் பாலத்தை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும் என அரசுக்கும் நெடுஞ்சாலை துறைக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். எம்.பிரபாகரன்</p>
