பலத்த சூறைக் காற்று பாபநாசத்தில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன
1 Jun 2026, 11:06 pm
<p><strong>பலத்த சூறைக் காற்று பாபநாசத்தில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன</strong></p><p>பாபநாசம், ஜுன் 1- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தின் அய்யம் பேட்டை அருகே கணபதி அக்ரஹாரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனி யன்று முதல் சூறைக் காற்று வீசியது. இதில் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஒன்றிரண்டு மின் கம்பங்களும் சாய்ந்தன. மா மரத்தில் காய்த்திருந்த மாங்காய்கள் கொட்டின. ஒருசில வீடு, கடைகளில் போட்டிருந்த தகர சீட்டு கள் காற்றில் பறந்தன. இதுதொடர்பாக கணபதி அக்ரஹாரத்தில் 12 ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்த முன்னோடி விவசாயி ஜெய்சங்கர் கூறுகையில், “என்னுடைய வயலில் 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. வாழை மரத்தில் காய்த்திருந்த ரஸ்தாளி, செவ்வாழை முற்றும் முன்னரே சாய்ந்து விட்டது. அரசு, ஏக்கருக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.</p>
