நொய்யல் ஆற்றங்கரை சாலையில் கனரக வாகனங்களுக்குத் தடை
14 Mar 2026, 2:57 pm
<p><strong>நொய்யல் ஆற்றங்கரை சாலையில் கனரக வாகனங்களுக்குத் தடை</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 14- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நொய்யல் ஆற்றங்கரையில் அமைந் துள்ள நிட்மா சாலையில் கனரக வாக னங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள் ளது. மேலும், சாலையின் நுழைவாயி லில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப் பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், நொய்யல் ஆற் றங்கரை ஓரமாக புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகி றது. அந்த வகையில், யூனியன் மில் சாலையை அடுத்து, தெற்கு மின் மயா னம் வழியாக காசிபாளையம் செல்லும் நிட் மா சாலை சமீபத்தில் புதுப்பிக்கப் பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப் பட்டது. இச்சாலையில் ஏராளமான சரக்கு புக்கிங் நிறுவனங்கள் இயங்கி வருவதால், அவற்றுக்கு வரும் கனரக வாகனங்கள் அதிகளவில் இருபுறமும் சென்று வந்தன. இந்நிலையில், புதிதாக போடப் பட்ட இந்த சாலையில் அதிக எடை மற்றும் உயரமான கனரக வாகனங் கள் தொடர்ந்து செல்வதால், சாலை விரைவில் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையின் சில பகுதிகள் குறுகலாகவும், வளைவுகள் நிறைந்ததாகவும் இருப்பதால், பெரிய வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வும், விபத்து அபாயம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த னர். இதையடுத்து, மாநகராட்சி நிர்வா கம் மற்றும் போக்குவரத்து போலீஸார் இணைந்து ஆய்வு நடத்தி, பொதுமக்க ளின் பாதுகாப்பு மற்றும் சாலையை பாதுகாக்கும் நோக்கில் சாலையின் நுழைவாயிலில் இரும்புத் தடுப்புகள் அமைத்துள்ளனர். கனரக வாகனங்கள் உள்நுழைய முடியாத வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது இச் சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின் றன. மேலும், இதுகுறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், தடையை மீறி கனரக வாகனங் களை இயக்க முயன்றால், கடும் நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
