தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

5 Apr 2026, 5:18 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பர்கூர் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

ஈரோடு, ஏப்.5- அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பாதை வழி யாக கர்நாடகா மாநிலம் செல்ல கனரக வாகனங்க ளுக்கு திங்களன்று (இன்று) முதல் ஏப்.16 ஆம் தேதி  வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் வட்டம், கொள்ளேகால் - செல்லம்பாளையம் சாலையில் ராமாபுரம் நால்ரோடு வரையில், நெடுஞ் சாலைத்துறை சார்பில் சாலை புனரமைப்பு பணி மேற் கொள்ளப்பட உள்ளது. இதனால், திங்களன்று (இன்று) மாலை முதல் ஏப்.16 ஆம் தேதி வரை கனரக  வாகனங்களை பர்கூர் மலைப்பாதையில் தற்காலிக மாக அனுமதிக்க வேண்டாம் என சாம்ராஜ் நகர் மாவட்ட துணை ஆணையர் கேட்டுக் கொண்டார். இதனடிப்படையில் ஈரோடு மாவட்டம், அந்தியூர், பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் திங்களன்று மாலை முதல்  தடை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ச.கந்த சாமி தெரிவித்தார். இதையடுத்து மாற்றுப்பாதை யான திம்பம், தாளவாடி வழியாக கர்நாடக மாநிலம்  செல்ல அறிவுறுத்தபட்டுள்ளது.

திருப்பூர் தெற்கு தொகுதியில் தினேஷ்குமார் வாக்கு சேகரிப்பு

திருப்பூர், ஏப்.5 - திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி யில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  திமுக வேட்பாளராக மேயர் தினேஷ்குமார் போட்டியிடுகிறார். ஞாயிறன்று காலை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நஞ்சப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வாக்காளர் களிடம் வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து குமரன் ரோடு, கேத்தரின் சர்ச், கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.சி.எல். அருள்  நாதர் ஆலயம் மற்றும் அவிநாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயம் உள் ளிட்ட இடங்களில் உதயசூரியன் சின்னத் திற்கு திமுகவின் சாதனை விளக்க துண்டு  நோட்டீஸ் வழங்கி தீவிர வாக்கு சேகரிப் பில் ஈடுபட்டார்.

ரயில்வே பாலம் பராமரிப்புப் பணி: கோயம்புத்தூர் - ஷொர்ணூர் பயணிகள் ரயில் ரத்து

சேலம், ஏப்.5- பாலக்காடு - சொர்ணூர் ரயில்வே பிரிவில்  உள்ள பாலங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் ஏப்ரல்  7 ஆம் தேதியன்று கோயம்புத்தூர் மற்றும்  ஷொர்ணூர் இடையேயான பயணிகள் ரயில்  சேவை ரத்து செய்யப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்துச் சேலம் ரயில்வே கோட்ட  மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா  மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: பாலக்காடு - ஷொர்ணூர் பிரிவில் உள்ள  ரயில்வே பாலங்களில் பொறியியல் பரா மரிப்புப் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப் பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் ஏப்ரல்  7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை  08.20 மணிக்கு ஷொர்ணூர் சந்திப்பிலிருந்து கோயம்புத்தூர் புறப்பட வேண்டிய ஷொர் ணூர் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56604) முழுமையாக ரத்து செய் யப்படுகிறது. அதேபோல், அன்று மாலை 04.25 மணிக்குக் கோயம்புத்தூர் சந்திப்பிலிருந்து ஷொர்ணூர் புறப்பட வேண்டிய கோயம் புத்தூர் - ஷொர்ணூர் பயணிகள் ரயில் (வண்டி  எண்: 56603) சேவையும் முழுமையாக ரத்து  செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு  நாள் மட்டும் இந்த ரயில் சேவை ரத்து செய் யப்படுவதால், பயணிகள் தங்களது பயணத்  திட்டத்தை அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளு மாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள் ளது.

தலைமைக்கான போட்டியில் தோற்கும் யானை மந்தையை விட்டு வெளியேற்றப்படும்!

அண்ணாமலையின் நிலைமை அதுதான். ஜெய லலிதா மரணத்துக்கு பிறகு தமிழ் நாட்டில் அதிமுகவை கரைக்கவும் பாஜகவை அந்த இடத்தில்  உட்கார வைக்கவும் அண்ணாமலை இங்கே கொண்டு  வரப் பட்டார். பசுமை விகடனில் விவசாயி, ஆடு வளர் பவர் போஸ் கொடுத்ததில் இருந்து அண்ணாமலை யின் பிம்பத்தில் எதுவுமே உண்மையில்லை. அவ ரது அடாவடி பேச்சுக்கள், நடவடிக்கைகள் எல்லாமே அவரை தனிப் பெரும் தலைவராக நிலை நிறுத்த பாஜக கட்சியால் திட்டமிட்டு வடிவமைக்கப் பட்டவை. அண்ணாமலை சில பாஜக தலைவர்களை ஓரம் கட்டி யதையும் கட்சி ஏற்றுக் கொண்டது. தமிழ்நாடு மற்றும் வட இந்திய பாஜக ஊடகங்கள் அண்ணாமலையை பெரும் அறிவிஜீவியாக, தலை வராக முன்னிலைப் படுத்த ஓவர் டைம் வேலை செய் தன. கட்சி தனது அதிகாரம், ஆள், அம்பு அனைத்தை யும் பயன்படுத்தியது. ( இதில் வேடிக்கை என்ன வெனில் பாஜக முதலில் தொடங்கிய ஆடு வளர்ப்பு இமேஜ் பாஜகக்கு வெளியே உள்ளவர்களிடம் காமெ டியாகி அவருக்கு அறிவுத் தளத்தில் இடமே கிடைக் காத அளவுக்கு தொல்லையாக மாறியது). அதிமுகவில் இருந்து தலைவர்கள் வெளியேறு வது தொடர்ந்தாலும் பாஜக தாக்குதலில் இருந்து அந்த கட்சி தப்பித்துக் கொண்டது. தன்மீது தாக்குதல் நடத்திய பாஜகவிடம் அதிமுக கேட்ட விலைதான் அண்ணாமலை. கவுண்டர் சமூகம் மற்றும் தொழிலதி பர்கள் ஆதரவு பெற்ற, 4 1/2 லட்சம் வாக்கு வாங்கும் இன்னொரு தலைவர் கொங்கில் இருப்பதை எடப்பாடி எப்படி ஏற்றுக் கொள்வார்? பாஜகவிற்கு இந்த நாலரை லட்சம் ஒரு பொருட்டில்லை. அது அண்ணாமலை மட்டும் வாங்கியது அல்ல என்பதும், ஒவ்வொரு தேர்த லிலும் இந்த அளவுக்கு all out effort எடுக்க முடி யாது என்பதும் அந்தக் கட்சிக்கு தெரியும். எனவே இப்போது அண்ணாமலை அந்தக் கட்சிக்கு அவசிய மில்லை. அதற்கு தேவை வெற்றி மட்டுமே. தேவைப்பட்டால் பிறிதொரு காலத்தில் பாஜக

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.