திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் தவிப்பு
55 minutes before

திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் தவிப்பு

திருத்தணி, நவ.22-கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையொட்டி ஏராளமான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலில் வாகனங்களில் வருகை தந்தனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள்என்பதால் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இன்றுவருகை தந்தனர். பலர், வாகனங்களில்மலை கோயிலில் குவிந்தனர். இதனால் வாகன நிறுத்துமிடம் முழுமையாக நிரம்பிய நிலையில் மலையடிவாரத்தில் அனைத்து வாகனங்களும் தடுத்துநிறுத்தப்பட்டது.

கோயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் மற்றும் நடந்துசெல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அரக்கோணம் சாலைக்கு இருபுறமும் வாகனங்கள் ஒரு மணி நேரம் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் பெரும்பாலும் திருவண்ணாமலை தீபதிருவிழாவில் பாதுகாப்பு பணிகளுக்குஅனுப்பப்பட்டதால் திருத்தணியில் போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது. இதனால் கடும் அவதி அடைந்தனர்.