முந்தய பக்கம்

தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை

8 Apr 2026, 5:30 am
தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை

தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த கோடை மழை

தஞ்சாவூர், ஏப். 7- தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக, கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, பேராவூரணி, ஒரத்தநாடு, பூதலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram