தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

21 Feb 2026, 4:39 pm
சென்னை விரைவு செய்திகள்

4 மாவட்டங்களில்  இடி, மின்னலுடன் இன்று கனமழை!

சென்னை, பிப்.21- தென்கிழக்கு வங்கக்கட லில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் ஞாயிற்  றுக்கிழமை (பிப். 22) தேனி,  திண்டுக்கல், மதுரை மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,காற்றழுத்த தாழ்  வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள்  விவோ அறிமுகம்

சென்னை, பிப். 20- விவோ இந்தியா நிறுவனம் விவோ வி70 மற்றும் விவோ வி70 எலைட் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சமாக வெய்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்  பட்ட 50 எம்.பி மெயின் கேமரா மற்றும் ‘ஏஐ ஸ்டைல் போர்ட்ரெய்ட்’ தொழில்நுட்பம் உள்ளது. இதில் உள்ள 1.3 செ.மீ சென்சார் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க முடியும். விவோ வி70 எலைட் மாடலில் அதிவேக மான ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 பிராசஸர் மற்றும் 1.5K அல்ட்ரா கிளியர் ஓஎல்இடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியர்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட ஏஐ ஹோலி போர்ட்ரெய்ட் மற்றும் ஏஐ மேஜிக் வெதர் போன்ற நவீன அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.

மினி டைடல் பார்க்: அரசு டெண்டர் கோரியது!

சென்னை, பிப். 21 - மாநிலம் முழுதும் தகவல் தொழில்நுட்ப  வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக் கில், நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்  கோட்டை மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர்  அறிவித்துள்ளது. நாகப்பட்டினத்தில் ரூ. 42 கோடியில் 58,660 சதுர அடியிலும், கரூரில் ரூ. 37 கோடி யில் 64 ஆயிரம் சதுர அடியிலும், புதுக் கோட்டையில் ரூ. 37 கோடியில் 60,386 சதுர  அடியிலும் இந்த கட்டடங்கள் அமைய உள்ளன. மொத்த திட்ட செலவு ரூ. 120  கோடி ஆகும். தகுதியான நிறுவனங் களை தேர்வு செய்து நான்கு மாதங்களுக் குள் கட்டுமான பணிகளை துவக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது

சிதம்பரம், பிப். 21- சென்னையிலிருந்து  ஒரு குடும்பத்தினர் சீர்காழி நோக்கி காரில் பயணம் செய்து கொண்டி ருந்தபோது, அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அது லால்புரம் புறவழிச் சாலையோரத்தில் இருந்த டீக்கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதிவிட்டுச் சாலையோர முட் புதரில் தலைகுப்புறக் கவிழ்ந்தது. கார் அதிவேகமாக வந்ததைக் கவனித்த அங்கிருந்த 20-க்கும் மேற்பட்டோர் சிதறி ஓடிய தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காய மடைந்தவர்களை மீட்ட தாலுகா காவல்துறையினர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

புதுச்சேரி, பிப். 21-  ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலக்குழு கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநிலத் தலைவர் முனி யம்மாள், செயலாளர் இளவரசி ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறி யிருப்பதாவது: தமிழக முதல்வர் மகளிருக்கான உரிமைத் தொகையான மூன்று மாதத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக் கால நிவாரணமாக ரூ. 2,000 சேர்த்து அவர வர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப் படும் என அறிவித்தார். இது முறை யாக நடைமுறைப்படுத்தப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. தமிழக முதல்வரின் இத்தகைய நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒன்றாகும்.  இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆடிட்டர் குருமூர்த்தி, பெண்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். அவர் தனது பேச்சை உடனே வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால் அவரைச் சிறையில் அடைக்கும் வரை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் பெண்களை அணி திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்து வோம் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

பேருந்தில் நூதன முறையில்  7 பவுன் நகை திருட்டு

சிதம்பரம், பிப். 21-  மூதாட்டியிடம் 7 பவுன் நகையை நூதன முறையில் திருடிச் சென்ற இரண்டு பெண்களைச் சிதம்பரம் காவல்துறையினர் கைது செய்தனர்.  சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தைச் சேர்ந்த கனக ராஜ் மனைவி வள்ளி (60), வடலூருக்குச் சிதம்பரத்தி லிருந்து பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் நகைகள் குறித்துப் பேசித் திருடர்கள் அதிகம் இருப்பதாகக் கூறி நகைகளைக் கழற்றிப் பையில் வைக்கும்படி நம்ப வைத்துள்ளனர். இதனை நம்பிய வள்ளி தனது 7 பவுன் நகைகளைக் கழற்றிப் பையில் வைத்தபோது, அந்தப் பெண்கள் ‘பேப்பரில் மடித்துக் கொடுக்கிறோம்’ என்று கூறி நகை களை மடித்துக் கொடுத்துள்ளனர். பின்னர் பேருந்து சிறிது தூரம் சென்றபோது அவர்கள் இறங்கித் தப்பியுள்ளனர். காகிதத்தைப் பிரித்துப் பார்த்த வள்ளி அதில் கவரிங் வளையல்கள் இருந்த தைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ஜம்பு லிங்கம் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சி களை ஆய்வு செய்து விசாரணை மேற் கொண்டார். இதில் கிருஷ்ண கிரி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாள் (60) மற்றும் நேத்ரா (33) என்பது தெரியவந்தது. அவர்க ளிடம் இருந்த 7 பவுன் நகை களைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.