முந்தய பக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

yesterday
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
<p><strong>கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை</strong> </p><p>கள்ளக்குறிச்சி, ஜூன் 22 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பலத்த மழை பெய்தது. சங்கராபுரம் மட்டுமின்றி, புத்திராம்பட்டு, சிட்டந்தாங் கல், ஊராங்கனி, எஸ்.வி.பாளையம், பாவளம், மல்லா புரம், ரங்கப்பனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் அரை மணி நேரத்திற்கும் மேலாகச் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்தத் திடீர் மழை அவர்க ளுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்தது. மழையினால் சாலைகள் குளிர்ந்து, வெப்பம் தணிந்து சூழல் இதமாக மாறியது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram