தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை : 3 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆற்றில் நீர்வரத்து

9 Oct 2026, 2:35 am
மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை : 3 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆற்றில் நீர்வரத்து

மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை : 3 ஆண்டுகளுக்குப் பிறகு நொய்யல் ஆற்றில் நீர்வரத்து

கோவை, அக்.8-கோவை மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையடிவார நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாததால் நொய்யல் ஆறு முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்குச் சென்று பாசனத்திற்கு வழியின்றி விவசாயிகள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஆற்றில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாய நிலங்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆற்றில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளதால், நடப்பு பருவ சாகுபடியை நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.