முந்தய பக்கம்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

1 Oct 2026, 3:07 pm
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
<p>தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p><p>கோவை, நீலகிரி, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.</p><p>மேலும், திருச்சி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>இதனிடையே, தமிழகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 13 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் அக்டோபர் 15 முதல் 21ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram