தீக்கதிர் விரைவு செய்திகள்
5 Nov 2026, 11:37 pm

இன்று7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, நவ. 5 -தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (நவ.6) கனமழை பெய்யக்கூடும் என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்து கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்குஅரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.செங்கல் பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சிலஇடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் இன்று இயங்கும்!

சென்னை, நவ. 5 -தமிழகத்தில் செயல் படும் நியாய விலைக் கடைகளுக்கு மாதத்தின் முதல்மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள். ஆனால், ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட இருப்ப தால், இந்தமாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.