தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கனமழை எச்சரிக்கை: அவசர கால நடவடிக்கைகள் தீவிரம்

26 Nov 2025, 3:40 pm
கனமழை எச்சரிக்கை: அவசர கால நடவடிக்கைகள் தீவிரம்

கனமழை எச்சரிக்கை: அவசர கால நடவடிக்கைகள் தீவிரம்

சென்னை, நவ.26- வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் பேரிடர் எதிர்கொள் ளும் ஆயத்த நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழில கத்தில் உள்ள மாநில அவசர கால செயல் பாட்டு மையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற் கொண்டார். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையின் தெற்குப் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு  மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய  வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இதனால்  தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தில் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 11  அணியினரும், தேசிய பேரிடர் மீட்புப் படை யின் 8 அணியினரும் பல்வேறு  மாவட்டங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். நீர்த்தேக்கங்களில் உபரிநீரை முன்கூட்டியே  திறத்தல், வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள், தேவைக்கேற்ப பொதுமக்களை நிவாரண  முகாம்களில் தங்க வைத்தல் உள்ளிட்ட  அறிவுறுத்தல்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு  வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாற்றுத்திற னாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் வெளி யேற்றத்தில் கவனம் செலுத்துமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

நவ.29-இல் 6 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’

நவம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தில் ஆறு மாவட்டங் களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மை யம் தெரிவித்துள்ளது. நவ.27 இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. நவ.28 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர்,  நாகை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யும் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவ.29 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,  மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதி  கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக் காலிலும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவ.30 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட்  அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், வேலூர்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி யில் கனமழை பெய்யும். இதனிடையே இலங்கைப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய புயலுக்கு  ‘தித்வா’ என பெயர் சூட்டப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.