முந்தய பக்கம்

கனமழையால் போக்குவரத்து பாதிப்பு

20 May 2026, 12:06 am
கனமழையால் போக்குவரத்து பாதிப்பு
<p><strong>கனமழையால் போக்குவரத்து பாதிப்பு</strong></p><p>நாமக்கல், மே 19- குமாரபாளையத்தில் பலத்த சூறாவளி கற்றுக் கூடிய கனமழையால், தேசிய நெடுஞ் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கோடை வெயிலில் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், திங்களன்று மாலை நேரத்தில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியான காவேரி நகர் சின்னப் பநாயக்கன்பாளையம், எம்ஜிஆர் நகர், குப் பாண்ட பாளையம், சாணார்பாளையம், தட் டாங்குட்டை மற்றும் பல்லக்காபாளையம் உள்ளிட்ட பகுதியில் சுமார் ஒரு மணி நேரத் திற்கு மேலாக கோடை மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக குமாரபாளை யம் குளத்துக்காடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் சுமார் இரண்டடி மட்டத்திற்கு தேங்கியது. இதனால், நெடுஞ் சாலையில் போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பள்ளிபாளையத்தில் இடைவிடா மல் பெய்த மழையின் காரணமாக பள்ளி பாளையம் அக்கரகாரம் உள்ளிட்ட இடங்களி லுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதி களவு தேங்கி நின்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram