கனமழையால் நெல்லை மாவட்டத்தில் வீடுகள், சாலைகளில் குவிந்த ஈசல்கள் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் கடும் அவதி
4 Oct 2026, 11:51 pm

கனமழையால் நெல்லை மாவட்டத்தில் வீடுகள், சாலைகளில் குவிந்த ஈசல்கள் பொதுமக்கள்- வாகன ஓட்டிகள் கடும் அவதி

திருநெல்வேலி,அக் 4-நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய பெய்த தொடர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை நேரத்தில்லட்சக்கணக்கான ஈசல்கள் குவியத் தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வழக்கமாக கோடை மற்றும் முப்பருவ காலங்களில் பெய்து வரும் மழையின் போது நிலத்தடியில் இருந்து ஈசல்கள் வெளியே வருவது வழக்கம். அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் ஈரப்பதம் அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் திடீரென ஏராளமான ஈசல்கள் கூட்டம் கூட்டமாகவெளியேறின.மாநகர் மற்றும் கிராமப்புற சாலைகளில் உள்ள மின் விளக்குகளைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஈசல்கள் வட்டமடித்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது ஈசல்கள் மோதி, பார்வைக்குறைபாடு ஏற்பட்டு வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர்.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் வீடுகளுக்குள் மின்வெளிச்சத்தை நோக்கி ஈசல்கள் படையெடுத்தன. சமையல் அறைகள், வரவேற்பறைகள் என வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஈசல்கள் குவியத் தொடங்கின இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, கிராமப்புறங்களில் விளக்கு வெளிச்சத்தை அணைத்துவிட்டு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களிலும் ஈசல்கள் விழுந்ததால் இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.மழை தொடர்ந்து பெய்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு ஈசல்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.