வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்
19 Jun 2026, 12:09 am
<p><strong>வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்</strong></p><p>நாமக்கல், ஜூன் 18- குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி கழிவு நீர் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்த தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குமாரபாளை யம், குப்பாண்டபாளையம், தட்டாங்குட்டை, எம்.ஜி.ஆர். நகர், சானார்பாளையம், சின்னப்ப நாயக்கன்பாளையம் மற்றும் காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று காலை முதல் கடுமையான வெயில் நிலவிய நிலையில், மாலையில் வானிலை திடீரென மாறி கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், சாக்கடை கால்வாய்களும் நிரம்பி வழிந்தன. குறிப்பாக, காவிரி நகர் மற்றும் சின்னப்பநாயக் கன்பாளையம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு களில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் வீடுகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட னர். சாலைகளிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடிய தால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. மழை ஓய்ந்த பின்னரும் சாரல் மழை தொடர்ந்த நிலையில், கழிவுநீர் தேக்கத்தால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. நோய்த்தொற்று பரவும் அபா யம் இருப்பதாக அச்சம் தெரிவித்த பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீரை அகற்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
