தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

5 Jun 2026, 11:05 pm
மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் கனமழை  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதிகளில் கனமழை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி, ஜூன் 5- நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணையில் 58.80 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,140.97 கனஅடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 204.50 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணையில் 76.77 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. மணிமுத்தாறு அணையில் தற்போது 67.73 அடி நீர் இருப்பு காணப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 803.33 கனஅடி நீர் வரத்து உள்ளது.

வடக்கு பச்சையாறு அணையில் 50 அடியில் 6 அடி நீரும், நம்பியாறு அணையில் 22.96 அடியில் 14 அடி நீரும் இருப்பில் உள்ளது. கொடுமுடியாறு அணையில் 52.50 அடியில் 7 அடி நீர் இருப்பு காணப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 43 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில், 2 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனிடையே மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கில் 165 மில்லி மீட்டரும், ஊத்தில் 153 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 120 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 97 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மேலும் சேர்வலாற்றில் 26 மி.மீ., கொடுமுடியாற்றில் 24 மி.மீ., பாபநாசத்தில் 22 மி.மீ., மணிமுத்தாற்றில் 14.2 மி.மீ., கன்னடியானில் 11.80 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 9 மி.மீ., ராதாபுரத்தில் 6 மி.மீ., சேரன்மகாதேவியில் 4.60 மி.மீ., பாளையங்கோட்டையில் 3.20 மி.மீ. மற்றும் களக்காட்டில் 1.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.