முந்தய பக்கம்

அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

9 Nov 2025, 2:37 pm
அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
<p><strong>அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு</strong></p> <p>சென்னை, நவ.9 - &nbsp;தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் உள்ள &nbsp;ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வட தமிழகம் &nbsp;மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் &nbsp;வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நவ.10, 11, 12, 13 ஆகிய தேதி களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளி லும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப் பாக, நவ.12 அன்று தஞ்சாவூர், புதுக் கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. &nbsp;நவ.13 அன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திரு நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய &nbsp;வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, திங்க ளன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மித மான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, &nbsp;நான்கு நாட்கள் மீனவர்களுக்கு எந்தவிதமான &nbsp;எச்சரிக்கையும் இல்லை என சென்னை &nbsp;வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram