தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெல்லையில் கனமழை: பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்குள் மழை நீர் புகுந்தது

13 Nov 2025, 3:30 pm
நெல்லையில் கனமழை:  பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்குள் மழை நீர் புகுந்தது
<p><strong>நெல்லையில் கனமழை: &nbsp;பாளையங்கோட்டை மார்க்கெட்டுக்குள் மழை நீர் புகுந்தது</strong></p> <p>திருநெல்வேலி, நவ.13- பாளையங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட் முழுவதுமாக இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த மார்க்கெட்டை திறந்து வைத்தார். நீதிமன்ற வழக்கு, கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய கடைகளுக்கு வியாபாரிகள் வர மறுத்த நிலையில். கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அனை த்து கடைகளும் தற்காலிக காய்கறி சந்தையில் இருந்து புதிய வணிக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட தொடங்கியது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நெல்லை மாநகரில் இடி-மின்னலுடன் பெய்த மழையால் காய்கறி சந்தை முழுவதும் மழை நீரால் நிரம்பியது. மக்கள் நடக்க முடியாதபடியும். வியாபாரிகள் பொருட்கள் கொண்டு செல்ல முடியாத படியும் சூழல் உரு வானது. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட வணிக வளாகம் மாற்றுத்திறனாளிகள் நடந்து வந்து காய்கறி வாங்க முடி யாத சூழலில் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக வியாழக்கிழமை காலை மாற்றுத் திறனாளிகள் சிலர் கோஷம் எழுப்பிய வண்ணம் காய்கறி வணிக வளாகத்திற்குள் பேரணி யாக சென்றனர். இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் காய் கறி சந்தையை சூழ்ந்த மழை நீரில் தூண்டில் போட்டு வியாபாரிகள் மீன் பிடித்து தங்கள் வேதனை யை வெளிப்படுத்தினர். லட்சக் கணக்கில் முன்பணம் மற்றும் ஆயிரக்கணக்கில் வாடகை கொடுத்தும்கூட மழைநீர் வெளியே செல்வதற்கான அடிப்படை கட்டமைப்புகள் இல்லாதது வேதனை அளிக்கிறது. மழைநீர் அனைத்தும் பல்லாரி, சின்ன வெங்காயம் மூடைகளுக்குள் புகுந்து நாசம் ஆகிவிட்டது. கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நாங்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என தெரிவித்தனர். இதற்கிடையே வியாபாரிகளு க்கு ஆதரவாக மாற்றுத்திறனாளி களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.