குளம்போல் தேங்கிய தண்ணீரில் சிக்கி தவித்த வாகனங்கள் உதகையில் வெளுத்து வாங்கிய கனமழை
yesterday

குளம்போல் தேங்கிய தண்ணீரில் சிக்கி தவித்த வாகனங்கள் உதகையில் வெளுத்து வாங்கிய கனமழை

குளம்போல் தேங்கிய தண்ணீரில் சிக்கி தவித்த வாகனங்கள் உதகையில் வெளுத்து வாங்கிய கனமழை உதகை, ஜூன் 21- உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக, சாலைக ளில் குளம் போல் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் சிக்கியதால், சுற்றுலாப் பயணிகள் தவிப்பிற்குள் ளாகினர். நீலகிரி மாவட்டத்தில் ஞாயி றன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச் சரிக்கை விடுத்திருந்தது. அதன் படி, காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய கால நிலை நிலவி வந்தது. தொடர்ந்து பிற் பகல் 12 மணி முதல் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், காந்தல், எபிஎப், தலைக் குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் கனமழை பெய்தது. மழையின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், தாழ் வான பகுதிகளில் வெள்ள நீர் சாலைகளில் ஆறு போல் ஓடிய தால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலை யில், வார விடுமுறை நாளான ஞாயி றன்று உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க முடியா மல் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக, உதகை படகு இல் லத்தில் படகு சவாரி செய்ய ஆர்வத் துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணி கள், தற்காலிகமாக சவாரி ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந் தனர். கனமழையின் காரணமாக சேரிங்கிராஸ் மற்றும் இரும்புப்பா லம் பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள் ளாகினர். மத்திய பேருந்து நிலை யம் அருகே உள்ள ரயில் பாலத் திற்கு கீழே வெள்ளத்தில், ஆட் டோக்களில் பயணித்த பயணிகள், வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். அரை மணி நேரமாக வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட சுற்றுலாப் பயணி களை மீட்பதற்கு தீயணைப்புத் துறையினர் வராததால் ஆட்டோக் களிலேயே சுற்றுலாப்பயணிகள் காத்திருந்தனர். எனவே, மழைநீர் வடிகால்களை முறையாக தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.