முந்தய பக்கம்

சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழை

6 May 2026, 1:13 am
சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழை

சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழை

உதகை, மே 5- உதகை, கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் நடுவே பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று மாதமாக மழை இல்லாமல் வறட்சியாக காணப்பட்டது.

மேலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது.

இதனால் கோடை சீசனில் வந்த சுற்றுலாப் பயணிகளும் நீலகிரி கோடை வெயிலின் தாக்கத்தை அனுபவித்தனர்.

இந் நிலையில், செவ்வாயன்று நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தி ருந்த நிலையில் பிற்பகலில் உதகை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதி களில் கனமழை பெய்தது.

இந்த கன மழையின் காரண மாக வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்ட பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்த னர்.

மேலும் இந்த மழை உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் உள்ளிட்ட பயிர்களுக்கு உகந்ததாக இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையின் காரணமாக கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram