நீலகிரியில் கனமழை: குன்னூரில் 21.5 செ.மீ. மழைப்பதிவு
2 Jan 2026, 3:33 pm
<p><strong>நீலகிரியில் கனமழை: குன்னூரில் 21.5 செ.மீ. மழைப்பதிவு</strong></p>
<p>உதகை, ஜன.2- நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்ச மாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக ளில் கடந்த மாதம் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட் டது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக உறை பனியின் தாக்கம் குறைந்து காணப் பட்ட நிலையில், வியாழனன்று இரவு முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதி களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக உதகை, குன் னூர், கோத்தகிரி, கெத்தை, குந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் மலை ரயில் தண்டவாளங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 21.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல, கோத்தகிரியில் 11.4 செ.மீ, கீழ் கோத்தகிரியில் 7.3 செ.மீ, கெத்தை யில் 6.6 செ.மீ, கிண்ணக்கொரையில் 6.3 செ.மீ, கொடநாடு மற்றும் குந்தா வில் 5.1 செ.மீ, பர்லியாரில் 4.6 செ.மீ, தகையில் 3.74 செ.மீ மழை பதிவாகி யுள்ளது. இதைத்தொடர்ந்து, வெள் ளியன்று பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையிலான அதிகாரிகள், சீர மைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.</p>
