தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாஞ்சோலை அருகே நாலுமுக்கு ஊத்து மலை பகுதிகளில் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி

29 Jun 2026, 9:25 pm
மாஞ்சோலை அருகே  நாலுமுக்கு ஊத்து மலை பகுதிகளில்  கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி

மாஞ்சோலை அருகே நாலுமுக்கு ஊத்து மலை பகுதிகளில் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி

திருநெல்வேலி, ஜூன் 29 - நெல்லை மாவட்டம் மாஞ்சோலையை அடுத்துள்ள நாலுமுக்கு ஊத்து மற்றும் சுற்றுவட்டார மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் (திங்கட்கிழமை) அதிகாலை முதல் மிகக் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலைப்பகுதி முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்து இயற்கை எழில் மேலும் மிளிர்கிறது. கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதி, கடந்த சில நாட்களாக மழையின்றி கடும் வெயிலின் தாக்கத்தை சந்தித்து வந்தது. இதனால் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சுற்றுப்புற வனப்பகுதிகளில் ஈரப்பதம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் திங்களன்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மலைப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் தேயிலைத் தோட்ட பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து மழை நீடித்தால் மாஞ்சோலை, நாலுமுக்கு ஊத்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஓடைகள், சிற்றாறுகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக உயரும் வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.